• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-13 10:45:11    
பாதுகாப்பு பற்றிய கல்விக்கு முக்கியத்துவம் தந்த XIANG TAN நகர்

cri

இவ்வாண்டு மே 12ஆம் நாள் சிச்சவான் மாநிலத்தின் வென் ச்சுவான் மாவட்டத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தினால், உள்ளூர் மக்களுக்கு மட்டுமல்ல, சுற்றுப்புற இடங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால், நிலநடுக்க மையத்திலிருந்து அதிக தூரத்தில் இல்லாத ஆன் சியென் மாவட்டத்திலுள்ள சாங் ச்சௌ இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த 2000க்கு அதிகமான ஆசிரியர் மற்றும் மாணவர்களில் யாரும் காயமடையவில்லை. 2005ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு கல்விக் காலத்திலும் அவசரமாக வகுப்பறைகளிலிருந்து வெளியேறும் பயிற்சியை சாங் ச்சௌ இடைநிலைப் பள்ளி மேற்கொண்டு வருவதே இதற்கான முக்கிய காரணமாகும். சீனாவின் பல இடங்களில், மாணவர்களின் பாதுகாப்பு பற்றிய அறிவு மற்றும் அவசர நிலைமையைச் சமாளிக்கும் திறனை உயர்த்துவதில் பல பள்ளிகள் ஊன்றி நின்று வருகின்றன. ஒவ்வொரு ஆண்டு ஜுன் திங்களும் ஹு நான் மாநிலத்தின் XIANG TAN நகரின் பாதுகாப்பான உற்பத்தி திங்களாகும். இம்மாநிலத்தின் பல பள்ளிகள் இக்காலத்தில் பாதுகாப்பு பற்றிய பல்வேறு நிகழ்ச்சிகளை மேற்கொள்ளும்.

எடுத்துக்காட்டாக, XIANG TAN நகரிலுள்ள 12வது இடைநிலைப் பள்ளி நடத்திய நிலநடுக்கத்துக்கு எதிரான பயிற்சியில், அவரசமாக புகலிடம் தேடுவது, அவசரமாக வெளியேறுவது, காயமுற்றோரைக் கண்டறிந்து காப்பாற்றுவது ஆகிய 3 நடவடிக்கைகள் அடங்கும்.

எச்சரிக்கை ஒலி கேட்டதும் வகுப்பறைகளில் பாடம் நடத்திய ஆசிரியர்களும் மாணவர்களும் உடனடியாக மேசைகளின் கீழ் பதுங்கி, புத்தக பைகளைப் பயன்படுத்தி தலைகளைப் பாதுகாத்தனர். முதல் கட்ட நிலநடுக்கம் கடந்த பின், மாணவர்கள் இரண்டு வரிசைகளில் ஒழுங்காகவும் வேகமாகவும் வகுப்புறைகளிலிருந்து வெளியேறி விளையாட்டுத் திடலை நோக்கி ஓடினர்.

படிக்கட்டுகளின் திருப்பு முனையில் ஆசிரியர்கள் "சீக்கிரமாக வெளியேறுங்கள். முந்திக் கொண்டு ஓடாதீர்கள்" என்று குரலெழுப்பியதோடு, ஒழுங்கைப் பேணிகாக்க மாணவர்களுக்கு ஆணையிட்டனர். மாணவர்கள் அனைவரும் கட்டிடத்திலிருந்து வெளியேறிய பின் ஆசிரியர்களும் வெளியேறினர். அந்தப் போக்கு முழுவதும் விரைவாகவும் ஒழுங்காகவும் நடந்தேறியது. 2 நிமிடங்களுக்குள் 1000க்கு மேற்பட்ட ஆசிரியர்களும் மாணவர்களும் பள்ளிக்கூடத்தின் விளையாட்டுத் திடலில் ஒன்று திரண்டதனர். மேடையில் நின்ற ஆசிரியர் ஒருவரின் ஆணைக்கிணங்க, பல்வேறு வகுப்புகளும் மாணவர்களைக் கணக்கிட்டு, காயமுற்றோருக்கு சிகிச்சை வழங்கத் தொடங்கின. சில நிமிடங்களுக்குப் பின், நிலநடுக்கம் முடிந்து விட்டது என்று ஆணையாளரான ஆசிரியர் அறிவித்து, அனைவரையும் தரையில் உட்காரச் செய்தார். அதற்குப் பின்னர், நிலநடுக்கத்துக்கு எதிரான பயிற்சி நிறைவுற்றது என்று அவர் பள்ளித் தலைவரிடம் அறிவித்தார்.

12வது இடைநிலைப் பள்ளியின் தலைவர் காங் ஜின் சோ பேசுகையில், அவரச நிலைமையைச் சந்தித்த மாணவர்கள் விரைவாகவும் ஒழுங்காகவும் வெளியேறுவதை உறுதிப்படுத்தும் வகையில், நெருக்கடிகளைச் சமாளிப்பது தொடர்பான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என்றும், இது தொடர்பான பயிற்சி வார நாட்களில் அடிக்கடி மேற்கொள்ளப்படுகிறது என்றும் கூறினார்.

XIANG TAN நகரத்தின் கல்வித் துறைப் பணியகத்தின் தலைவர் லியௌ யீ ச்சொங் பேசுகையில், ஹு நான் மாநிலம் நிலநடுக்கக் கோட்டில் இல்லாத போதும், நிலநடுக்கத்தில் தன்னை தானே காப்பாற்றுவது தொடர்பான கல்வியை வலுப்படுத்த வேண்டும் என வென் ச்சுவான் நிலநடுக்கம் எங்களுக்கு நினைவூட்டுகிறது என்று தெரிவித்தார்.