• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-13 10:29:24    
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு சீனாவிலுள்ள ஜப்பானிய தூதரின் நல்வாழ்த்துக்கள்

cri

முன்னெப் போதும் கண்டிராத ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை சீனா வெற்றிகரமாக நடத்தும். சீனாவிலுள்ள ஜப்பானிய தூதர் Michigami Hiroshi பெய்சிங்கில் எமது செய்தியாளருக்கு பேட்டி அளித்த போது, இவ்வாறு தெரிவித்தார். அண்டை நாடான ஜப்பான் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வெற்றிகரமாக நடைபெறுவதற்கு ஆதரவு அளித்து வருகின்றது என்று அவர் கூறினார். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வெற்றிகரமாக நடைபெற வேண்டுமென ஜப்பான் தலைமை அமைச்சர் Fukuda Yasuo ஜப்பானிய அரசின் சார்பில்

விருப்பம் தெரிவித்துள்ளார். இவ்வாண்டு மே திங்கள், சீன அரசுத் தலைவர் ஹு சிந்தாவ் ஜப்பானில் பயணம் மேற்கொண்ட போது, அவரிடம் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு ஜப்பான் ஆதரவு அளிப்பதாக Fukuda Yasuo தெரிவித்துள்ளார். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வெற்றிகரமாக நடைபெறுவதுக்கு ஆசியாவிலான அண்டை நாடான ஜப்பான் உளமார வாழ்த்து தெரிவிக்கின்றது என்றார் அவர்.
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்தப் பணிகள் பற்றி பேசிய போது Hiroshi கூறினார்.

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி தடையின்றி நடைபெறுவதற்கு பெய்சிங் ஆயத்தம் செய்துள்ளது. போக்குவரத்து, பாதுகாப்பு, சுற்றுச்சூழல், குடிமக்களின் கல்வி அறிவின் உயர்வு, தொண்டர்களின் மீதான பயிற்சி ஆகிய பல்வேறு துறைகளில் போதிய முன்னேற்பாட்டை பெய்சிங் மேற்கொண்டுள்ளது. சீன மக்கள் மற்றும் அரசின் நடவடிக்கைகளுக்கு நான் மதிப்பளிக்கின்றேன் என்றார் அவர்.