• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-13 10:16:14    
மாவு விற்பவள்

cri

ஒரு ஊரில் ஒரு செல்வந்தர் வாழ்ந்து வந்தார். அவரும் அவரது மனைவியும் செல்வந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு ஒரு மகன் இருந்தான். தங்களது ஒரே மகன் மீது அவர்கள் உயிரையே வைத்திருந்தனர். இந்த மகன் ஒருநாள் சந்தையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, ஒரு அழகான இளம்பெண்ணைக் கண்டான். அவள் ஒரு கடையில் வெள்ளீயத்தூளை விற்றுக்கொண்டிருந்தாள். கண்டதும் அவளது அழகில் மயங்கி காதலில் விழுந்த அவன், நேரடியாக சென்று தன் காதலை கூற துணிவின்றி, அவளை நெருக்கத்தில் பார்க்கலாமென அவளது கடைக்கு அந்த மாவை, வெள்ளீயத்தூளை வாங்குவது போல் சென்றான். இப்படியே அவன் நாள்தோறும் அவளை பார்க்க அவளது கடைக்குச் சென்று வெள்ளீய மாவை வாங்கினான். இவன் தினமும் வந்து செல்வதை பார்த்து சந்தேகித்த அந்த அழகிய இளம்பெண், ஒரு நாள் " இவ்வளவு வெள்ளீய மாவை வாங்கி என்ன செய்கிறீர்ர்கள்" என்று கேட்க, இதுநாள் வரையும் தன் மனதில் இருந்ததை அவளிடம் சொன்னான் செல்வந்தனின் மகன். தன் காதலை அச்சத்தோடு அவன் வெளிப்படுத்தியதைக் கண்ட அந்த இளம்பெண், மனமுருகி அன்று மாலை அவனை தனியே சந்திக்க இணங்கினாள்.
சொன்னது போலவே அன்று மாலை சாய்ந்து இரவு கண்விழிக்கும் நேரத்தில் அவனது அறைக்கு வந்தாள் அந்த அழகிய இளம்பெண். அவ்லைக் கண்டு பூரிப்பில் மெய்சிலிர்த்து நின்ற அவன், அவளை மெதுவாக அணைத்து " என் ஆசை நிறைவேறியது" என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினான். ஆனால் அவனது மகிழ்ச்சி எல்லை கடந்ததாகிவிட, இதயம் நின்றுபோனது, அவன் இறந்துபோனான்.


அதிர்ச்சியுற்ற அந்த இளம்பெண், பயத்தில் செய்வதறியாமல் அங்கிருந்து தனது கடைக்கு ஓடிவிட்டாள். மறுநாள் காலை, தங்களது மகன், காலை உணவுக்கு வரவில்லையே ஏன் என்று பார்க்க அவனது அறைக்கு வந்த செல்வந்த பெற்றோர், அங்கே தமது மகன் இரந்து கிடப்பதைக் கண்டு உடைந்து போயினர். அவனது அறையில் கிடந்த ஒரு பெட்டியில் பல பொட்டலங்கள் இருந்ததை கண்ட பெற்றோர், அதில் திறந்து பார்த்தபோது, உள்ளே வெள்ளீய மாவு இருப்பதை கண்டனர். இந்த மாவுதான் தமது மகனது இறப்புக்கு காரணம் என்றெண்ணி, உடனே சந்தைக்கு சென்று அதே விதமான பொட்டலம் கட்டும் கடை எது கண்டுபிடித்தனர். கடைக்கார இளம்பெண்ணை பார்த்து "ஏன் என் மகனைக் கொன்றாய்" என்று கேட்க, அவள் அழத்தொடங்கி நடந்த உண்மையை எடுத்துச் சொன்னாள். ஆனால் அவளை நம்பாத செல்வந்த பெற்றோர் அவளை நீதிமன்றத்தில் கொண்டு நிறுத்தினர். அந்த அழகில இளம்பெண், சாவுக்காக நான் அஞ்சவில்லை, ஆனால் தான் கொன்றதாக கூறும் அவனை, தன்னை காதலித்த அந்த இளைஞனை மறுபடியும் பார்த்து, துக்கம் அனுசரிக்க அனுமதிக்குமாறு வேண்டினாள். நீதிபதியும் இதற்கு இணங்கினார். இறந்து கிடந்த இளைஞனின் உடலை கட்டியணைத்து அந்த இளம்பெண் அழத்தொடங்கினாள். "என்ன கொடுமை, இப்படியான முடிவு நமக்கு கிடைத்தது. ஆனால் அன்பே, நாம் இருவரும் இறப்புக்குபின் ஆன்மாவால் ஒன்றிணைந்து வாழ்வோமென்றால், நான் நிறைவோடு உயிர்விடுவேன்" என்று கூறினாள். அவள் சொல்லி முடித்த சீக்கிரம், இறந்துகிடந்த இளைஞன் உயிருடன் எழுந்தான். பின் நடந்த உண்மையை மற்றவர்களுக்கு விளக்கி தான் காதலித்த பெண் அந்த குற்றமும் அறியாதவள் என்று கூறி, பின் அவளையே மணமுடித்து, நீண்டகாலம் வாழ்ந்தான்.