பெய்ஜிங் ஒலிம்பிக் கிராம் பெற்ற தங்கப் பதக்கம்
cri
 அமெரிக்க நிதி அமைச்சர் Henry Paulson இன்று அமெரிக்க பசுமை கட்டிட சங்கத்தின் சார்பில், பெய்ஜிங் ஒலிம்பிக் கிராமத்துக்கு எரியாற்ற மற்றும் சுற்றுச்சூழல் வடிவமைப்பு முன்னணி தங்கப் பதக்கத்தை வழங்கினார். ஒலிம்பிக் கிராம் உள்ளிட்ட ஒலிம்பிக் கட்டிடங்களின் கட்டுமானத்தில் பெய்ஜிங் தரப்பு முன்னேறிய கருத்துக்களையும், அதிக எரியாற்றலைச் சிக்கனப்படுத்தும் தொழில் நுட்பங்களையும் பயன்படுத்தியுள்ளது என்று இன்றை நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பெய்ஜிங் ஒலிம்பிக் கிராமத்தின் தலைவர் சென் ச்சி லி அம்மையார் கூறினார்.
 பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், உலகின் பல்வேறு இடங்களிலிருந்து வந்த பத்தாயிரத்தை மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் தீவிரமாகப் போட்டியிடுகின்றனர். இந்தப் போக்கில், மாசற்ற ஒலிம்பிக் கிராமம் அவர்களுக்கு சீரான வாழ்க்கை வசதி வழங்கியுள்ளது என்றும், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி மிகவும் மாசற்ற ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியாக மாறும் என்று Paulson தெரிவித்தார்.
|
|