• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-13 16:47:58    
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போதான சுற்றுலா நிலைமை

cri

முந்தைய ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை போலவே, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு பின், பெய்சிங் மாநகரும் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை இணைந்து நடத்தும் நகரங்களும் சுற்றுலாவின் உச்ச நிலையை வரவேற்கும்.

நேற்று முற்பகல் பெய்சிங் சர்வதேசச் செய்தி மையத்தில் நடைபெற்றச் செய்தியாளர் கூட்டத்தில் சீனத் தேசிய சுற்றுலாத் பணியகத்தின் துணைத் தலைவர் Wang Zhifa இவ்வாறு தெரிவித்தார்.

இந்தச் சுற்றுலா உச்ச நிலைமையைச் சமாளிப்பதற்குச் சீனாவின் தொடர்புடைய வாரியங்கள் தயாராக இருக்கின்றன என்று அவர் கூறினார். ஆகஸ்ட் திங்கள் துவக்கத்தின் முதல், பெய்சிங் மாநகரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை இணைந்து நடத்தும் நகரங்களும் உபசரிக்கும் வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. பல்வேறு உபசரிப்புப் பணிகள் தடையின்றி நடைபெறுகின்றன என்றும் அவர் எடுத்துக்கூறினார்.

கடந்த சில ஆண்டுகளில், சுற்றுலாத் துறை சீனத் தேசியப் பொருளாதாரத்தில் முக்கிய தொழிற்துறைகளில் ஒன்றாக மாறியுள்ளது. தற்போது, இத்துறை, சீன மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 4விழுக்காட்டு இடத்தை பெற்றுள்ளது. புள்ளி விபரங்களின் படி, 2007ம் ஆண்டில், சீனாவில் சுற்றுலா பயணம் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை 13கோடியே 20இலட்சத்தை எட்டியுள்ளது. உலகச் சுற்றுலாத் துறையில் சீனா நான்காவது இடத்தை வகிக்கிறது. 29வது கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெறும் சீனாவில் சுற்றுலா மேற்கொள்ள வேண்டுமென வெளிநாட்டுப் பயணிகள் பலர் விரும்புகின்றனர்.

நேற்று நடைபெற்றச் செய்தியாளர் கூட்டத்தில் Wang Zhifa கூறியதாவது:

பெய்சிங் ஒலிம்பிக் அமைப்புக் குழுவுடன் கையொப்பமிடும் ஹோட்டல் அறைகளின் முன்பதிவு அளவு அதிகமாகும். ஆகஸ்ட் முதல் நாள் தொடக்கம் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழா வரையான காலத்தில், மேற்கூறிய தொடர்பான நகரங்களிலுள்ள ஹோட்டல்களின் அறைகளில் வசிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. ஆகஸ்ட் 11ம் நாள் வரை, பெய்சிங், ஹாங்காங், Qing Dao, Qing Huangdao, Shen Yan ஆகிய நகரங்கள் உபசரித்துள்ள வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 6350 ஆகும். தவிர, 10ம் நாள் வரை, பெய்சிங்கிலுள்ள ஹோட்டல்களின் விருந்தினர்களை உபசரிக்கும் அளவு, 81.2 விழுக்காட்டை எட்டியுள்ளது என்றார் அவர்.

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது, சீனாவில் சுற்றுலா மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து விரைவாக அதிகரித்த போதிலும், உச்ச நிலையை எட்டவில்லை என்று Wang Zhifa குறிப்பிட்டார். சீனத் தேசிய சுற்றுலாப் பணியகத்தின் பரிசீலனை மற்றும் ஆய்வின் படி, முந்தைய ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நிறைவுற்ற பின், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை ஏற்பாடு செய்யும் நாடுகள் சுற்றுலா பயணிகளின் உச்ச வருகை நிலைமையை எதிர்கொள்ளும். இந்த்த தன்மைக்கு இணங்க, பெய்சிங் மாநகரம் மற்றும் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை இணைந்து நடத்தும் நகரங்களின் சுற்றுலா உச்ச நிலையை அடையும் என்று Wang Zhifa சுட்டிக்காட்டினார். இதற்கு, சீனாவின் சுற்றுலா வாரியங்கள் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளன என்று அவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது.

இவ்வாண்டை, ஒலிம்பிக் சுற்றுலா ஆண்டாக மாற்ற நாங்கள் உறுதிப்படுத்தினோம். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு முந்திய, மத்திய மற்றும் பிந்தைய, போட்டியின் இடையிலான மற்றும் பிந்தைய கால சுற்றுலா நிலைமையை செவ்வனே ஏற்பாடு செய்தோம். முதலில், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியுடன், சுற்றுலா உபசரிப்புக்கான அடிப்படை வசதிகளும் பொதுச் சேவை வசதிகளும் மேலும் மேம்படுத்தப்பட்டன.

இரண்டு, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு பின் நிகழக் கூடிய சுற்றுலா உச்ச நிலையை எதிர்கொள்ளும் வகையில், பல்வேறு காட்சித் தலங்களில் உபசரிப்பு வசதிகளின் கட்டுமானத்தையும் புதிய சுற்றுலா திட்டங்களின் வளர்ச்சியையும் வலுப்படுத்தினோம். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு பின், சீனாவின் சுற்றுலா உபசரிப்பு திறன் வலுவடையும் என்றார் அவர்.