• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-13 18:03:58    
ஒலிம்பிக் பதக்க வரிசை

cri

இன்று, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் 5வது நாளாகும். பெய்ஜிங் நேரப்படி, பிற்பகல் 6 மணி வரை, மகளிர் குழு ஜிம்னாஸ்டிக்ஸ் எனும் சீருடற்பயிற்சி போட்டி, 25மீட்டர் மகளிர் கை துப்பாக்கி சுடுதல் போட்டி, ஆடவர் மற்றும் மகளிர் ஒற்றையர் நேர அளவு மிதிவண்டி போட்டி, ஆடவர் 3 மீட்டர் வளை பலகை நீர்குதிப்பு போட்டி, 200 மீட்டர் ஆடவர் வண்ணத்துபூச்சி பாணி நீச்சல் போட்டி, 200 மீட்டர் மகளிர் கலப்பு பாணி நீச்சல் போட்டி உள்ளிட்ட போட்டிகளில் பத்துக்கு மேலான தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் மகளிர் சீருடற்பயிற்சி குழுப் போட்டியில், சீன அணியின் வீராங்கனைகள் தங்கப் பதக்கம் வென்றனர்.
69 கிலோ எடைக்கு குறைவான மகளிர் பளுதூக்குதல் போட்டியில், சீன விளையாட்டு வீராங்கணை லியு சுன்ஹொங் தங்கப் பதக்கத்தை பெற்றதோடு, உலக சாதனை பதிவையும் உருவாக்கினார்.

ஆடவர் 3 மீட்டர் வளை பலகை நீர்குதிப்புப் போட்டியில், சீனாவின் விளையாட்டு வீரர்கள் வாங் பெங், சிங் காய் இருவரும் தங்கப் பதக்கத்தை பெற்றனர்.
25 மீட்டர் மகளிர் கை துப்பாக்கி சுடுதல் போட்டியில், சீனாவின் விளையாட்டு வீராங்கணை சென் யிங் 208.4 புள்ளிகள் என்ற சாதனையில் முதலிடம் பிடித்தார்.

200 மீட்டர் ஆடவர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சல் போட்டியில், அமெரிக்க விளையாட்டு வீரர் Michael PHELPS, 1 நிமிடம் 52.3வினாடிகள் என்ற நேரப்பதிவில் தங்கப் பதக்கம் பெற்றுள்ளார்.

200 மீட்டர் மகளிர் கலைப்பு பாணி நீச்சல் போட்டியில் ஆஸ்திரேலிய விளையாட்டு வீராங்கனை Stephanie Rice தங்கப் பதக்கத்தைப் பெற்றதோடு, 2 நிமிடம் 8.45வினாடிகள் என்ற நேரப்பதிவில், உலக சாதனை பதிவையும் முறியடித்தார்.

மகளிர் ஒற்றையர் நேர அளவு மிதிவண்டி இறுதிப் போட்டியில், அமெரிக்க வீராங்கனை Kristin ARMSTRONG 34 நிமிடம் 51.72வினாடிகள் என்ற நேரப்பதிவில் தங்கப் பதக்கம் பெற்றுள்ளார். ஆடவர் ஒற்றையர் மிதிவண்டி போட்டியில், ஸ்விட்சர்லாந்தின் விளையாட்டு வீரர் Fabian Cancellara ஒரு மணி 2 நிமிதம் நேரம் 11.43 வினாடிகள் நேரப்பதிவில் தங்கப் பதக்கம் பெற்றுள்ளார்.