• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-14 10:33:25    
ஏப்ரல் 29ம் நாள்

cri

1954ம் ஆண்டு ஏப்ரல் 29ம் நாள், சீன திபெத் பிரதேசத்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் போக்குவரத்து பற்றிய உடன்படிக்கையில் இரு நாடுகளும் கையொப்பமிட்டன. பஞ்சசீல கோட்பாடுகளுக்கு இணங்க, இரு நாட்டு உறவை பேண வேண்டும் என்று இவ்வுடன்படிக்கை கோரியது. அரசுரிமை மற்றும் உரிமைப் பிரதேச ஒருமைப்பாட்டுக்கு பரஸ்பரம் மதிப்புகொடுத்தல், அனாக்கிரமிப்பு, ஒன்று மற்றதன் உள் விவகாரங்களில் தலையிடாமை சமத்துவம் பரஸ்பர நலன் சமாதான சக வாழ்வு ஆகியவை இக்கோட்பாடுகளின் உள்ளடக்கங்களாகும்.

1953டிசம்பர் முதல் 1954ம் ஆண்டு ஏப்ரல் திங்கள் வரை, சீன மற்றும் இந்திய உறவு பிரச்சினை குறித்து, இரு நாட்டு பிரதிநிதிக் குழுக்கள் பெய்சிங்கில் பேச்சுவார்த்தைகள் நடத்தின. 1954ம் ஆண்டு ஜூன் 28ம் நாள், சீனத் தலைமை அமைச்சர் செவன்ஏன்லை இந்தியாவில் பயணம் மேற்கொண்டார். செள் அன்லாய் இந்திய தலைமை அமைச்சர் ஜவஹர்லால் நேருவும், புது தில்லியில் சீன மற்றும் இந்திய தலைமை அமைச்சர்களின் கூட்டு அறிக்கையை வெளியிட்டனர். இரு நாட்டு உறவை வழிக்காட்டும் பஞ்சசீல கோட்பாடுகள் இவ்வறிக்கையில் மீண்டும் வலுப்படுத்தப்பட்டன.

இதற்கு பின், உலகின் பல நாடுகள் பஞ்சசீல கோட்பாடுகளை ஏற்றுகொண்டன. இது, நாடுகளுக்கிடையிலான உறவை பேணிக்காக்கும் அடிப்படை கொள்கையாக மாறியுள்ளது.