• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-14 09:49:13    
ஹோங் சியெள சந்தை

cri

பெய்ஜிங் மாநகரின் புகழ்பெற்ற சந்தை, சீனாவில் முத்து அலங்காரப் பொருட்கள் விற்பனை செய்யும் மிகப் பெரிய சந்தையான ஹோங் சியெள சந்தை குறிப்பிடத்தக்கது. இங்கு வருவோரில் வெளிநாட்டுப் பயணிகள் மிகவும் அதிகம். ஆங்கில மொழி மூலம், விலை பேரம் பேசும் ஒலியை இங்கே அடிக்கடி கேட்கலாம். சீனாவில் பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டு தலைவர்களும், சீனாவிலுள்ள வெளிநாட்டுத் தூதரகத்தின் அதிகாரிகளும் இச்சந்தைக்கு வந்து பார்க்க விரும்புகின்றனர். இன்றைய நிகழ்ச்சியில், ஹோங் சியெள சந்தை பற்றி கூறுகின்றோம்.

1995ம் ஆண்டில் நிறுவப்பட்ட ஹோங் சியெள சந்தையில், 1100க்கு மேலான கடைகள் உள்ளன. முத்து மற்றும் முத்து அலங்காரப் பொருட்களின் விற்பனை அதன் தனிச்சிறப்பியல்பாகும். மென்மேலும் அதிகமான தொழில் நிறுவனங்கள், இந்தச் சந்தையில் வளர்ச்சியடைந்து உலகளவில் புகழ்பெற்றுள்ளன. ஹோங் சியெள சந்தை அலுவலகத்தின் தலைவர் வாங் லீ லுங் கூறியதாவது:
இச்சந்தையில் விற்பனை செய்யப்படும் பொருட்களில், முத்து அலங்காரப் பொருட்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. கடந்த நூற்றாண்டின் 80ம் ஆண்டுகளில், ஹோங் சியெள சந்தை, முத்துகளை விற்பனை செய்யத் தொடங்கியது. இப்பொழுது, சீனாவில் முத்தின் ஆண்டுக்கு உற்பத்தி அளவு, 1600 டன்னாகும். ஆண்டுதோறும், ஹோங் சியெள சந்தையில் சுமார் 200 டன் எடையுடைய முத்துப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. இதனால், சீனாவின் முத்துத் துறையின் விற்பனையில், இந்தச் சந்தை முக்கிய இடம் பெறுகிறது என்றார் அவர்.

பண்டைக்கால பாணியுடைய கட்டிடமும், விறுவிறுப்பான நுகர்வுச் சூழ்நிலையும் இங்கே சீராக இணைகின்றன. நிறைந்து காணப்படும் முத்து அலங்காரப் பொருட்கள், கலைப்பொருட்கள் ஆகியவை, ஏராளமான பயணிகளை ஈர்த்துள்ளன. ஒவ்வொரு கடையிலும் சில வெளிநாட்டுப் பயணிகள் பொருட்கள் வாங்குவதைப் பார்க்கலாம். விற்பனையாளர்கள் சரளமாக ஆங்கில மொழியில் நுகர்வோருக்கு தமது வணிகப்பொருட்களை அறிமுகப்படுத்தினர். இது ஒரு சர்வதேசமயமாக்க சுற்றுலா வணிகச் சந்தையாகும்.
வாங் லி லூங் கூறியதாவது:
தற்போது, இவ்விடத்தைப் பார்வையிட்டு, முத்து அலங்காரப் பொருட்களை வாங்க, வெளிநாட்டவர்கள் பலர் வருகின்றனர். ஆண்டுதோறும், சுமார் 5 இலட்சம் அல்லது 6 இலட்சம் வெளிநாட்டுப் பயணிகள், இங்கு வந்து செல்கின்றனர். பல நாடுகளின்

தலைவர்களும், அவருடைய மனைவியரும் இச்சந்தைக்கு வந்துள்ளனர். வெளிநாட்டு பெண்களின் மனதிலான பெருஞ்சுவராக, ஹோங் சியெள சந்தை அழைக்கப்படுகிறது. பெய்ஜிங்கிற்கு வந்து, இச்சந்தைக்கு போகவில்லை என்றால், மிகவும் வருத்தமடைவர் என்றார் அவர்.
அமெரிக்காவைச் சேர்ந்தவர் லெமொன்ட் சீனாவில், பல ஆண்டுகளாக வேலை செய்துள்ளார். தற்போது, யின் சுவான் நகரிலுள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் அவர் ஆசிரியராக பணிபுரிகின்றார். அவர் அடிக்கடி ஹோங் சியெள சந்தை சென்று, பொருட்களை வாங்குகிறார். முதல் முறையில் சீனாவில் பயணம் மேற்கொண்ட நண்பர்களுடன் இணைந்து சுற்றிப்பார்த்து பொருட்களை வாங்க, இங்கு வந்தார். அவர் கூறியதாவது:

இங்கே, முத்து அலங்காரப் பொருட்களையும், ஜேட் வெள்ளி மணிக்கல் பொருட்களையும் வாங்கலாம். இச்சந்தையில் வாங்கிய அனைத்துப் பொருட்களும் மனநிறைவுதந்தன. விற்பனையாளர்கள் ஆங்கில மொழியில் நன்றாக பேசலாம். அவர்களுடைய உயர்நிலை ஆங்கில மொழியைக் கண்டு, வியப்பு அடைகின்றேன். நண்பர்களும் குடும்பத்தினரும் பெய்ஜிங்கிற்கு வந்து தங்கியிருக்கும் போது, அவர்களுடன் இணைந்து இங்கே பொருட்களை வாங்க வருவேன் என்றார் அவர்.