இன்று பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் 6வது நாளாகும். மொத்தம் 17 தங்கப் பதக்கங்களுக்கான போட்டிகள் நடைபெறுகின்றன. பிற்பகல் 3 மணி வரை, நீச்சல், துப்பாக்கி சுடுதல் போட்டி, ஜிம்னாஸ்டிக்ஸ் எனும் சீருடற்பயிற்சி போட்டி உள்ளிட்ட போட்டிகளில் 6 தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
இன்று நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டின் 200 மீட்டர் ஆடவர் கவிழ்ந்த பாணி நீச்சலின் இறுதிப் போட்டியில், ஜப்பானிய வீரர் KITAJIMA KOSUKE, தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.
முற்பகல் நடைபெற்ற 200 மீட்டர் மகளிர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சல் போட்டியில், சீன வீராங்கனை liu zige, தங்கப் பதக்கம் பெற்று, உலக சாதனை பதிவை முறியடித்தார்.
200 மீட்டர் மகளிர் சுதந்தர பாணி தொடர் நீச்சல் போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கனைகள் நால்வர் உலக சாதனையை முறியடித்து, தங்கப் பதக்கம் வென்றனர்.
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் 50 மீட்டர் மகளிர் மூன்று நிலைகளில் குழல் துப்பாக்கி சுடும் இறுதிப் போட்டியில் சீன வீராங்கனை duli தங்கப் பதக்கம் வென்றார்.
ஆடவர் ஒற்றையர் அனைத்து வகை சீருடற்பயிற்சி இறுதி போட்டியில் சீன வீரர் yangwei தங்கப் பதக்கம் வென்றார்.
|