• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-14 18:17:40    
பிற்பகல் 6 மணி வரையான ஒலிம்பிக் பதக்க வரிசை

cri

இன்று பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் 6வது நாளாகும். மாலை 6 மணி வரை, நீச்சல், துப்பாக்கி சுடுதல், ஜிம்னாஸ்டிக்ஸ் எனும் சீருடற்பயிற்சி உள்ளிட்ட போட்டிகளில் 9 தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

இன்று நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டின் 200 மீட்டர் ஆடவர் கவிழ்ந்த பாணி நீச்சல் போட்டியில், ஜப்பானிய வீரர் KITAJIMA KOSUKE, தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.

முற்பகல் நடைபெற்ற 200 மீட்டர் மகளிர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சல் போட்டியில், சீன வீராங்கனை liu zige, தங்கப் பதக்கம் பெற்றதோடு, உலக சாதனை பதிவையும் முறியடித்தார்.

200 மீட்டர் மகளிர் சுதந்தர பாணி தொடர் நீச்சல் போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கனைகள் நால்வர் உலக சாதனையை முறியடித்து, தங்கப் பதக்கம் வென்றனர்.

100மீட்டர் ஆடவர் சுதந்திர பாணி போட்டியில் பிரான்ஸ் வீரர் Alain Bernard தங்கப்பதக்கம் பெற்றார்.

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் 50 மீட்டர் மகளிர் மூன்று நிலை இலக்கு குழல் துப்பாக்கி சுடுதலில் சீன வீராங்கனை duli தங்கப் பதக்கம் வென்றார்.

ஆடவர் ஒற்றையர் அனைத்து வகை சீருடற்பயிற்சி இறுதி போட்டியில் சீன வீரர் yangwei தங்கப் பதக்கம் வென்றார்.

இன்று பிற்பகல் முடிவடைந்த மகளிர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியின் பறக்கும் இலக்கு ஸ்கீட் பிரிவில் இத்தாலி வீரங்கனை Chiara Cainero தங்கப்பதக்கம் பெற்றார்.

84 கிலோ எடைக்கு குறைவான ஆடவர் கிரேக்க ரோமானிய பாணி மற்போர் போட்டியில் இத்தாலிய விளையாட்டு வீரர் Andrea Minguzzi தங்கப்பதக்கம் பெற்றார்.

பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் மகளிர் வில்வித்தை ஒற்றையர் போட்டியில் சீன விரங்கனை Zhang Junjuan தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.