
உலகில் சுமார் 200கோடி மக்கள் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவை கண்டுகளித்தனர். இது, உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியாகும் என்று உலக புகழ்பெற்ற செய்தி ஊடக ஆலோசனை குழு நியெல்சேன் 38 நாடுகள் மற்றும் பிரதேசங்களிலிருந்து திரட்டிய தரவுகள் கூறுகின்றன.

ஆசிய பசிபிக் பிரதேச பார்வையாளர்கள் துவக்க விழாவில் மிகவும் கவனம் செலுத்தினர். இப்பிரதேசத்தில் 50விழுக்காட்டு பார்வையாளர்கள் பெய்சிங் ஒலிம்பிக் துவக்க விழாவைக் கண்டுகளித்தனர். ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் கண்டுகளித்தோர் விகிதம் 30 மற்றும் 20 விழுக்காடு ஆகும் என்று தரவுகள் காட்டுகின்றன.
|