40 ஆண்டுகளுக்கு முன், மெக்சிகோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஆடவர் 200 மீட்டர் தவளைப் பாணி நீச்சலில் 17 வயதே ஆன மெக்சிகோ இளைஞர் ஒருவர் தங்கப்பதக்கம் பெற்றார். இப்போது, மெக்சிகோ ஒலிம்பிக் குழுவின் தலைவராக தொடர்ந்து இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ள அவர், தமது நாட்டின் ஒலிம்பிக் விளையாட்டு வளர்ச்சியை விரைவுபடுத்த பாடுபட்டு வருகின்றார். அவர் தான் ஃபெலிப்பே முன்யோஸ் கபாமாஸ்(Felipe Munoz Kapamas)
1968 ஆண்டு அக்டோபர் திங்கள், இளம் ஃபெலிப்பே முன்யோஸ் கபாமாஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் முதன்முறையாக கலந்து கொண்டார். ஆடவர் 200 மீட்டர் தவளை பாணி நீச்சலின் இறுதிப் போட்டியின் இறுதி 50 மீட்டரில் முந்தி முதல் இடத்தை பெற்றார். இறுதியில், உலக மக்களுக்கு அவர் தனது ஆற்றலை நிரூபித்தார். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் நீச்சல் போட்டியில் மெக்சிகோ தங்கப்பதக்கம் பெற்றது அதுவே முதன்முறையாகும். அப்போதைய சாதனை பற்றி பேசுகையில் அவர் கூறியதாவது
அப்போது, நான் மிகவும் மிகழ்ச்சியடைந்தேன். ஏனென்றால், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளும் கனவை நான் இறுதியில் நிறைவேற்றினேன். பலரது உதவியால் நான், சிறந்த பயிற்சிகளைப் பெற்றேன். அதே வேளையில், எமது தாய்நாட்டிலேயே, இந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. எனது சொந்த ஊரில் நீச்சல் போட்டி, நடைபெற்றது. வெற்றி பெறுவேன் என்று நான் முன்பு நினைக்கவில்லை. ஆனால், அது சிறந்த வாய்ப்பு ஆகும் என்பது எனக்கு தெரியும். மட்டுமல்ல அது ஒரே ஒரு வாய்ப்பும் ஆகும். எனவே நான் அதை பேணிமதித்தேன்.
தங்கப்பதக்கம் பெற்ற உடன், Felipe Munoz Kapamas,மெக்சிகோவின் விளையாட்டு நட்சத்திரமாக மாறினார். ஆனால், இதற்கு பிறகு, தோள் கொடுக்கும் கடமை, மென்மேலும் கடினமாக இருக்கின்றது என்றார் அவர்.
சீனா, அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் ஆகியவற்றில், பல சிறந்த விளையாட்டு வீரர்கள் உள்ளனர். அதே வேளையில், அவர்கள், பல ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளனர். ஆனால், மெக்சிகோவின் விளையாட்டு லட்சியத்தின் வளர்ச்சி, அவ்வளவு வேகமாக இல்லை. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் வெற்றியாளராக மாறினால் அனைத்தையும் பெற முடியும் என்று சிலர் கருதுகின்றனர். ஆனால், இப்போட்டியில் வெற்றி பெறுவது ,தற்காலிக வெற்றியாகும். மக்கள், தமது ஆற்றலை இடைவிடாமல் உயர்த்த வேண்டும். வாய்ப்பு வரும் முன்பு, மக்கள் முழுமையான ஆயத்தம் செய்ய வேண்டும் என்று Felipe Munoz Kapamas கூறினார்.
2001ம் ஆண்டு, அவர் மெக்சிகோவின் ஒலிம்பிக் குழுவின் தலைவராக மாறினார். 2005ம் ஆண்டு, தொடர்ந்து இரண்டாவது முறையாக ஒலிம்பிக் குழுவின் தலைவராக பதவி ஏற்றார். இதற்கு பிறகு, திங்கள்தோறும், சுமார் 900 அமெரிக்க டாலர் ஊதியத்தை கைவிடுவதாக அவர் அறிவித்தார். மெக்சிகோவின் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் வளர்ச்சி நிதிக்கு தமது ஊதியத்தை அழர் அளித்தார். இந்த தன்னலமற்ற செயல்பாடு, மெக்சிகோவின் பல விளையாட்டு மன்றங்களின் மதிப்பையும் நம்பிக்கையையும் பெற்றது.
விளையாட்டு எழுச்சி, எனக்கு மிகப் பெரிய உதவியளிக்கின்றது. விளையாட்டு, எனக்கு பல அறிவுகளைக் கொண்டுவருகின்றது. நியாயமாக போட்டியிட வேண்டும். பாடுபட வேண்டும். வெற்றியையும் தோல்வியையும் சரியாக எதிர்கொள்ள வேண்டும். விளையாட்டு, வாழ்க்கையை பற்றி குழந்தைகளுக்கு கற்றுத்தரும். ஆனால், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, அனைவருக்குமான கல்வியின் ஒரு பகுதியாகும். மக்களுடன் பழகி நண்பர்களாக விளையாட்டு ஒரு நல்ல வாய்ப்பாகும். உடல் கட்டுக்கோப்பு, சமுதாய உறவு முதலிய துறைகளில் விளையாட்டு, மக்களுக்கு நலன்களை கொண்டுவருகின்றது. பாடுபட்டு உழைக்க வேண்டும் என்பதை விளையாட்டு குழந்தைகளுக்கு கற்பிக்கும். சிறப்புப் பேட்டி நிறைவடையும் போது, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி பற்றி, அவர் கூறியதாவது
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, வெற்றிகரமான சிறப்பான அழகான போட்டியாகும். அதே வேளையில், அதுவும் சீனத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த போட்டியாகும். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை மக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர். நாம் அப்போட்டியை கண்டுகளிக்க வேண்டும். சீனாவில் உலக மக்கள் ஒன்று கூடுவார்கள். அப்போது, நாங்கள் அதில் கலந்து கொள்வோம்.
|