• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-15 17:49:04    
திபெத்தின் வளர்ச்சி

cri

1951ம் ஆண்டு திபெத், அமைதி முறையில் விடுதலை பெற்றதற்கு பின், திபெதிலான வாழ்க்கை, பொருளாதாரம், பண்பாடு, மருத்துவம், சமூக வாழ்வு, கல்வி முதலிய துறைகள், மாபெரும் முன்னேற்றங்களை பெற்றுள்ளன. அடுத்து இடம்பெறுவது, ஒர் இனம் தனது உண்மையான எண்ணிக்கை மூலம், 50விழுக்காட்டுக்கு மேலான வளர்ச்சியை கடந்த நூற்றாண்டில் பெற்ற திபெத்தினத்தின் அசுர வேகத்திலான வளர்ச்சியை எடுத்துக்கூறுகிறோம்.

முதலில் நிதி துறை. 1988ம் ஆண்டு திபெத்தின் உள்ளூர் நிதி வருமானம், பூஜியம் என்ற பதிவை முதன்முறையாக முறியடித்தது. கடந்த 20 ஆண்டுகளில், திபெத்தின் நிதி வருமானம் தொடர்ந்து அதிகரித்தது. 2007ம் ஆண்டில், திபெத்தின் உள்ளூர் நிதி வருமானம் 230கோடி யுவானை தாண்டியுள்ளது.

இரண்டாவது:மருத்துவ சிகிச்சை. திபெத் மக்களின் சராசரி ஆயுட்காலம், 1959ம் ஆண்டில் இருந்த 36வயதிற்கு குறைவாக இருந்ததிலிருந்த தற்போது 67வயதாக உயர்ந்துள்ளது. கர்ப்பினி மற்றும் பிரசவத்தின் போது மரணமடைந்த பெண்களின் இறப்பு விகிதம், கடந்த நூற்றாண்டின் 50 ஆண்டுகளில் இருந்த 5விழுக்காட்டிலிருந்து 2006ம் ஆண்டில் இருந்த 0.247விழுக்காடாக குறைந்தது. தற்போது, திபெத்திலான சுகாதார நிறுவனங்களின் எண்ணிக்கை, 1300க்கு மேலாகும். சுகாதார பணியாளர்களின் எண்ணிக்கை 9100க்கு மேலாகும். திபெத்திலான அனைத்து விவசாயிகளும் ஆயர்களும், கால்நடை வளர்ப்பு பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுகின்ற இலவசச் சிகிச்சையை அடிப்படையாக கொண்ட கூட்டுறவு மருத்துவத்தில் பங்கெடுத்துள்ளனர்.