• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-15 10:09:28    
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு சீனாவிலுள்ள இந்தியா தூதரின் நல்வாழ்த்துக்கள்1

cri
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வெற்றிகரமாக நடைபெறுவது உறுதி. சீனாவிலுள்ள இந்திய தூதர் நிருபமா ராவ் அம்மையார் எமது செய்தியாளருக்கு பேட்டி அளித்த போது, இவ்வாறு தெரிவித்தார்.

29வது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நேற்று சீனாவின் தலைநகரான பெய்சிங்கில் நடைபெற்றது. நிருபமா ராவ் அம்மையார் ஒலிம்பிக் சூழலை ஆழமாக உணர்ந்து, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்த சீனா மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளை நேரில் கண்டதாக கூறினார். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்தப் பணிக்கு சீன அரசு மற்றும் மக்கள் மாபெரும் முயற்சி மேற்கொண்டனர். புதிய ஒலிம்பிக் திடல்களையும் அரங்குகளையும் கட்டியமைத்து, போக்குவரத்து அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் வகையில், பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் என்றார் அவர்.

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி முழு உலக மக்களின் விழாவாகும். ஓர் உலகம், ஒரு கனவு என்பது பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் நோக்கமாகும் என்று நிருபமா ராவ் அம்மையார் கருதுகின்றார்.
முழு உலகத்தைப் பொறுத்த வரை, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி முக்கியத்துவம் வாய்ந்தது. கடந்த 100க்கு அதிகமான ஆண்டுகளில், வேறுபட்ட நாடுகளிலும் பிரதேசங்களிலும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, நாடுகளுக்கிடையிலான உறவை வலுப்படுத்தி, சுற்றுலா, பண்பாடு ஆகிய பல்வேறு துறைகளுக்கிடையிலான பரிமாற்றத்தை முன்னேற்றியது என்றார் அவர்.

மிகப்பெரிய வளரும் நாடான சீனா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்துவது என்பது சீனா உள்ளிட்ட வளரும் நாடுகளின் பெருமையாகும் என்று நிருபமா ராவ் அம்மையார் கூறினார். சீனா மீதான நட்பார்ந்த உணர்வுடன், பல்வேறு நாடுகளின் வீரர்கள், அதிகாரிகள், பயணிகள் ஆகியோர் பெய்சிங்கிற்கு வந்து, இந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்வார்கள் என்று அவர் நம்புகின்றார். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், தனது நாட்டு தனிச்சிறப்பியல்பை வீரர்கள் எடுத்துக்காட்டுவார்கள்.