41 வயதான Xu Lian அம்மையார், குவாங் துங் மாநிலத்தின் மேற்கு பகுதியில் உள்ள மலைப் பிரதேசத்தில் பிறந்தவராவார். அவரது மூதாதையர் விவசாயிகளாக இருந்தனர். அவர் வறிய குடும்பத்தில் வளர்ந்தார். துவக்கப் பள்ளி படிப்பை முடித்த பின், அவர் மேற்கொண்டு படிக்க முடியவில்லை. ஆனால், இதர பெண்களைப் போல், வயலில் உழைத்து, திருமணம் செய்து, குழந்தைகளைப் பராமரிக்க அவர் விரும்பவில்லை. 1985ஆம் ஆண்டு, அவர் Dong Guan நகருக்குச் சென்று, தைவான் வணிகர் ஒருவரால் நிறுவப்பட்ட செம்மறி ஆட்டு உரோம நெசவு ஆலை ஒன்றில் வேலை செய்யத் தொடங்கினார். 5 ஆண்டுகளுக்கு பின், தமது தலைசிறந்த நெசவுத் திறன் மற்றும் அயரா உழைப்பால், அவர் இந்த நிறுவனத்தின் நிர்வாக மட்டத்துக்கு உயர்ந்தார். பணியில் சரக்குகள் தொடர்பான அறிவு, நிர்வாக ரீதியான அனுபவங்கள் ஆகியவற்றை அவர் பெற்றார். பின்பு முதலாளியாக மாறும் அவரது கனவு நனவாகுவதற்கு இது அடிப்படையிட்டது. எதிர்காலத்தில் செம்மறி ஆட்டு உரோம நெசவுத் துறையின் வளர்ச்சிக்கு பரந்துபட்ட வாய்ப்பு உண்டு என்று Xu Lian அம்மையார் கருதுகிறார். 2000ஆம் ஆண்டு, தாம் கொஞ்சம் கொஞ்சமாக சேமித்த சுமார் ஒரு லட்சம் யுவானைக் கொண்டு, அவர் Dong Guan நகரின் Da Langவில் நிலத்தை குத்தகைக்கு வாங்கினார். இதற்குப் பின், அவர் தொழிற்சாலையைக் கட்டியமைத்து, சாதனங்களை வாங்கி, தொழில் நடத்தத் துவங்கினார். துவக்கத்தில், புழக்கம் செய்வதற்கான நிதித்தொகை அவருக்கு கிடைக்கவில்லை. சரக்குகளுக்கான தொகையைத் திரும்பப் பெறவில்லை. தவிர,
தேவைப்படும் நிதியை வாங்க முடியவில்லை. இதனால் அவர் மிகவும் கவலைபட்டார். தடுமாற்றம் ஏற்பட்டாலும், அவர் மன உறுதி கொண்டவராவார். சுமார் 6 திங்கள் காலத்துக்குப் பின், தொழிற்சாலையின் இயக்கம் படிப்படியாக இயல்பு நிலையை அடைந்தது. 2007ஆம் ஆண்டு இறுதியில், இத்தொழிற்சாலையில் 800 நெசவு இயந்திரங்கள் இருக்கின்றன. தொழிலாளர்களின் எண்ணிக்கை 1500 வரை அதிகரித்துள்ளது. நுண்ணிய பார்வை, அயரா உழைப்பு என்ற எழுச்சி, இன்னல்களை எதிர்கொண்டு முயற்சியை கைவிடாத மனப்பான்மை ஆகியவற்றைச் சார்ந்து, தொழில் நடத்தும் பாதையில் Xu Lian அம்மையார் வெற்றிகரமாக முதல் காலடியை எடுத்து வைத்தார். ஆண்டுக்கு ஆண்டு ஊதிய உயர்வுடன், பல்வேறு தொழிற்சாலைகள், செலவைக் குறைக்கும் வழிமுறையை நாடி வருகின்றன. 2007ஆம் ஆண்டு, Xu Lian அம்மையார், தொழிற்சாலையின் ஒரு பகுதி சாதனங்களை, தமது ஊரான Xin Yiயின் Chang Lang Gui Zi தொழிற்பூங்காவுக்கு இடம்பெயர்த்தார். அவர் அங்கு Long Hong ஆடை தயாரிப்பு நிறுவனத்தைத் திறந்து வைத்தார். 5 ஆயிரம் சதுர மீட்டர் நிலப்பரப்புடைய இத்தொழிற்சாலைக்கான மொத்த முதலீட்டுத் தொகை, ஒரு கோடியே 20 லட்சம் யுவானை எட்டியது. திட்டப்படி, இத்தொழிற்சாலையில் ஆயிரம் நெசவு இயந்திரங்கள் பொருத்தப்படும். இத்திட்டப்பணி உற்பத்தியில் இறங்கிய பின், ஆண்டுக்கு 6 லட்சம் பல்வகை கம்பளி ஆடைகள் தயாரிக்கப்படும். சொத்து மதிப்பு, 2 கோடியே 40 லட்சம் யுவானை எட்டக்கூடும். வரித்தொகையும், லாபமும் முறையே 7 லட்சம் யுவான் மற்றும் 22 லட்சம் யுவானை எட்டக்கூடும். தமது ஊரில் ஆயிரத்துக்கு அதிகமான பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படக்கூடும். Xu Lian அம்மையார், தொழிற்சாலையின் புகழுக்கு பெரும் முக்கியத்துவம் அளிக்கின்றார். அவர் வாடிக்கையாளர்களுக்கு நன்றாக சேவை புரிகின்றார். தவிர, வாடிக்கையாளர்களுக்கு "24 மணி நேர சேவை" என்ற விதிகளை அவர் வகுத்தார். அதாவது, சரக்குகளுக்கான தொகையைப் பெற்றதற்கு பிந்திய 24 மணி நேரத்துக்குள் வாடிக்கையாளர்களுக்கு சரக்குகளை அனுப்புவது, 24 மணி நேரத்துக்குள் வாடிக்கையாளரின் சந்தேகத்துக்குப் பதிலளிப்பது, புதிய உற்பத்திப் பொருள், சந்தையில் நுழைந்த 24 மணி நேரத்துக்குள் வாடிக்கையாளர்களுக்கு மாதிரிப் பொருளை அனுப்புவது. தவிர, தொழிலாளர்களின் திறனை உயர்த்துவதில் Xu Lian அம்மையார் கவனம் செலுத்துகின்றார். திறமைசாலிகளுக்கு அவர் முக்கியத்துவம் அளிக்கின்றார். தமது உற்றார் உறவினர் தொழிற்சாலையில் வேலைக்கு சேராமல் இருப்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். Xu Lian அம்மையாரின் பெரும் முயற்சியுடன், தொழிற்சாலையில் வேலை செய்யும் திறமைசாலிகள் அனைவரும் வெளியூரிலிருந்து
அமர்த்தப்பட்டிருக்கின்றனர். தொழிலாளர்களை, தொழிற்சாலையின் உரிமையாளர் என அவர் கருதுகின்றார். தொழிலாளர்களின் வாழ்க்கையை Xu Lian அம்மையார் கவனித்து, அவர்களுக்கு மகிழ்ச்சி தரும் வேலை மற்றும் வாழ்க்கைச் சூழலை வழங்க தன்னால் இயன்றதனைத்தையும் செய்கின்றார். தாம் முதலாளியாக மட்டுமல்ல, தொழிலாளர்களின் சகோதரராகவும், நண்பராகவும் மாற வேண்டும் என்று அவர் கருதுகின்றார். இதனை செய்தால்தான், தொழிலாளர்கள் சாதனையைப் பெற கூட்டாக பாடுபடுவர் என்று அவர் கருதுகின்றார். தவிர, Xu Lian அம்மையார் சமூகத்துக்கு ஆக்கப்பூர்வமாக பங்காற்றி, ஆண்டுதோறும் 10 வறிய மாணவர்களுக்கு நிதியுதவி வழங்குகின்றார். Xu Lian அம்மையாரின் முயற்சியுடன், ஒரு சிறிய ரக நெசவுத் தொழிற்சாலை, திறமைசாலிகள் அதிகமாக இருக்கும் மூன்று பெரிய ரகத் தொழில் நிறுவனங்களாக வளர்ந்துள்ளது. தொழிற்சாலையின் நெசவு செய்முறை நுட்பம் மேம்பட்டு, உற்பத்தி அளவு விரிவாகியுள்ளது. உற்பத்திப் பொருட்களின் தரம் படிப்படியாக உயர்ந்து, Dong Guan சந்தையில் நல்ல விற்பனையை பெற்றுள்ளன. தவிர, இந்த பொருட்கள் He Bei, Tian Jin, Shan Xi உள்ளிட்ட மாநிலங்களிலும் மாநகரங்களிலும் விற்கப்பட்டு, வாடிக்கையாளர்களின் பாராட்டைப் பெற்றுள்ளன. இவ்வாண்டின் மகளிர் தினத்தை முன்னிட்டு, Mao Ming நகரின் மகளிர் சம்மேளனம், Xu Lian அம்மையாருக்கு ஒரு கெளரவ பட்டத்தை சூட்டியது.
|