பெய்ஜிங் ஒலிம்பிக்கைப் பாராட்டும் வெளிநாட்டு செய்தி ஊடகங்கள்
cri
இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் சீன வீரர்கள் பெற்ற சாதனைகளை பாராட்டி இந்நாட்களில் சில முக்கிய வெளிநாட்டு செய்தி ஊடகங்கள் அறிவித்துள்ளன. அதேவேளையில் நடப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான சிறந்த அமைப்பையும் சிறந்த சேவை தரத்தையும் பாராட்டின. 200 மீட்டர் மகளிர் வண்ணத்துபூச்சி பாணி நீச்சல் போட்டியின் சாம்பியன் பட்டத்தை சீன வீராங்கனை liu zi ge பெற்றதுடன் ஆஸ்திரேலிய செய்தியேடுகள் அச்செய்தியை அறிவித்தன. சீன வீரர்களின் நன்நடத்தையை அவை மிகவும் பாராட்டின. பாகிஸ்தான் செய்தியேடுகள் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கென சிறப்பு பக்கத்தில் பன்முகங்களிலும் வாசகர்களுக்கு பெய்ஜிங்கில் நடைபெறுகின்ற ஒலிம்பிக் விளையாட்டுச் செய்திகளை உடனுக்குடன் அறவித்தன. எகிப்தின் முக்கிய செய்தியேடான ஆல் அஹ்ராம் விமர்சனக் கட்டுரை வெளியிட்டு பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி மூலம் காணப்பட்ட சீனச் சீர்திருத்தம் ஏற்படுத்திய வளர்ச்சியிந் சாதனைகளை பாராட்டியுள்ளது. ஓர் உலகம் ஒரு கனவு என்ற முழக்கம் சீனாவில் சில ஆயிரம் ஆண்டுகளாக நீடித்திருந்த ழுச்சியா குழுவினரின் சிந்தனையாகும். கடந்த சில ஆண்டுகளில் சீனா முன்வைத்த இணக்க வளர்ச்சி என்ற கருத்து இந்த குழுவினரின் சிந்தைக்கான விளக்கமும் நடைமுறையும் ஆகும் என்று விமர்சனக் கட்டுரை கூறியது.கென்யா மற்றும் ஹங்கேரிய செய்தியேடுகள் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் பற்றி விபரமாக செய்திகளை அறிவித்து வருகின்றன..
|
|