சீன அரசுத் தலைவர் ஹுச்சிந்தாவ் 15ம் நாள் பெய்ஜிங்கில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை கண்டு இரசிக்க வருகை தந்திருக்கும் சிந்கப்பூர் அரசுத் தலைர் எஸ் ஆர் நாதனை சந்தித்துரையாடினார்.

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நாதன் கண்டுகளிக்க வருகை தந்தணைக்கு ஹுச்சிந்தாவ் வரவேற்பு தெரிவித்தார். அத்துடன் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு சிங்கப்பூர் அளித்த ஆதரவுக்கு நன்றியும் தெரிவித்தார். சிங்கப்பூர் வீரர்கள் போட்டிகளில் சாதனை பெற ஹுச்சிந்தாவ் வாழ்த்தியுள்ளார். பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழா மிகவும் பிரமாண்டமான தலைசிறந்த விழாவாக அமைந்தது.
பல்வேறு போட்டிகள் ஒழுங்கான முறையில் நடைபெறுகின்றன. பன்னாட்டு நண்பர்கள் பெய்ஜிங்கில் மகிழ்ச்சிகரமாக பரிமாற்றம் மேற்கொள்வது ஓர் உலகம் ஒரு கனவு என்ற முழக்கத்தை முழுமையாக வெளிகாட்டியுள்ளது என்று அரசுத் தலைவர் நாதன் சந்திப்பின் போது தெரிவித்தார். சீனா வெற்றிகரமாக ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்துவது ஆசிய மக்கள் அனைவருக்குமே பெருமை என்றார் அவர்.
|