ஊக்கமருந்து பயன்பாடு கண்டுபிடிப்பு
cri
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இரண்டு ஊக்கமருந்து பயன்படுத்தப்பட்டுள்ளதாக இரு நிகழ்ச்சிகள் உறுதிப்படுத்தப்பட்டது என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி 15ம் நாள் அறிவித்தது. வட கொரிய ஆடவர் துப்பாக்கி சுடும் வீரர் கிம் ஜெங் சு, வியட்நாம் மகளிர் சீருடற்பயிற்சி வீராங்கனை Do Thi Ngan இருவரும் ஊக்கமருந்து உட்கொண்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அவர்கள் போட்டிகளில் பங்கெடுக்கும் தகுதி நீக்கப்பட்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியிலிருந்து விலக்கப்பட்டனர் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் டாவிஸ் பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்தார். ஆகவே ஆகஸ்ட் 9ம் நாள் நடைபெற்ற 10 மீட்டர் ஆடவர் கை துப்பாக்கி சுடும் போட்டியின் வெள்ளி பதக்கம் சீன வீரர் தைன் ச்சு லியானுக்கும் வெண்கல பதக்கம் ரஷிய வீரர் இஷாகோவுக்கும் வழங்கப்பட்டன.
|
|