சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் பாராட்டு
cri
இன்று பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் 7ம் நாளாகும். போட்டியின் அமைப்பு மற்றும் இயங்கும் பணி குறித்து, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மனநிறைவு தெரிவித்தது. இக்கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் Giselle Davies அம்மையார் கூறியதாவது
இந்த விளையாட்டு விழாவில், 28 வகை விளையாட்டுகளும், 10 ஆயிரத்து 500 விளையாட்டு வீரர்களும், 20 ஆயிரம் செய்தியாளர்கள் மற்றும் மிகப் பல பார்வையாளர்கள் பங்கெடுத்துள்ளனர். அமைப்புப் பணி அனைத்தும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டன. இது குறித்து மிகவும் மனநிறைவு அடைந்துள்ளோம் என்றார் அவர். பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்புக் குழு இன்னும் நிர்பந்தத்தை எதிர்நோக்குகின்றது. பல வெளிநாட்டு அரசியல் தலைவர்களை உபசரித்து, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை ஏற்பாடு செய்யும் அதேவேளையில், ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியையும் சிறப்பாக ஏற்பாடு செய்ய வேண்டியுள்ளது என்று பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்புக் குழுவின் துணை நிர்வாகத் தலைவர் வாங் வெய் தெரிவித்தார்.
|
|