தடை செய்யப்பட்ட மருந்து சம்பவம்
cri
ஆகஸ்ட் திங்கள் 15ம் நாள் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் தடை செய்யப்பட்ட மருந்து உட்கொண்டது பற்றிய தகவல் ஒன்று வெளியிடப்பட்டது. வட கொரிய வீரர் கிம் ஜுங் சு, நடுக்கத்தைக் கட்டுப்படுத்தும் propanolol எனும் தடை செய்யப்பட்ட மருந்தை உட்கொண்டதற்காக நடப்பு ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பறிக்கப்பட்ட முதல் விளையாட்டு வீரராக மாறினார். அவர் பெற்ற ஆடவர் 50 மீட்டர் கைத் துப்பாக்கி வெள்ளி பதக்கம் 3ம் இடத்தில் இருந்த சீன வீரர் தான் சுங் லியாங்கிற்கு வழங்கப்படும் என்று தெரிய வருகின்றது. சர்வதேச துக்காக்கிச் சுடுதல் சம்மேளனத்தின் தலைவர் Olegario Vazquez Rana இச்செய்தியை உறுதிப்படுத்தினார். அதே நாள் வியட்நாம் சீருடற்பயிற்சி வீராங்கணை Do Thi Ngan Thuong ஊக்க மருந்தை உட்கொண்டதற்காக ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியிலிருந்து விலக்கப்பட்டார் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவித்தது. இதற்கு முன், ஸ்பெயின் மிதி வண்டி வீராங்கணை Maria Moreno அதே பிரச்சினையால், பெய்ஜிங் ஒலிம்பிக்கிலிருந்து விலகினார்.
|
|