பெய்சிங் ஒலிம்பிக் கிராமத்துக்கான பாராட்டு
cri
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி துவங்கிய பின், ஒலிம்பிக் கிராமத்தில் பல்வேறு பணிகள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மற்றும் பல்வேறு நாடுகளின் வீரர்களும் அதிகாரிகளும் இவ்வற்றை பாராட்டினர்.
ஒலிம்பிக் கிராம விவகாரங்களுக்கு பொறுப்பான ரபெய்சிங் ஒலிம்பிக் அமைப்புக் குழுவின் துணைத் தலைவர் Deng Yaping அம்மையார் இன்று பெய்சிங்கில் இவ்வாறு தெரிவித்தார். பெய்சிங் ஒலிம்பிக் கிராமத்துக்கு 4 தனிச்சிறப்புகள் உண்டு. முதலாவது, புள்ளி விபரங்களின் படி, ஆகஸ்ட் 8ம் நாள் துவக்க விழா நாளில் ஒலிம்பிக் கிராமத்திலான உணவு மண்டத்தில் உணவு உட்கொண்ட மக்களின் எண்ணிக்கை 18ஆயிரத்து 634 ஆகும். முந்திய ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இது மிக அதிகமாகும்.
இரண்டாவது, ஆகஸ்ட் 14ம் நாள் வரை, ஒலிம்பிக் கிராமம் வரவேன்ற வெளிநாடுகளின் அரசியல் தலைவர்கள் மற்றும் அரசக் குடும்பங்களின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 62 ஆகும். இதுவும் ஒலிம்பிக் வரலாற்றில் மிக அதிகமாகும். மூன்றாவது, முந்திய ஒலிம்பிக் கிராமங்களுடன் ஒப்பிடுகையில், பெய்சிங் ஒலிம்பிக் கிராமம் மேலும் பசுமையான வடிவமையை பயன்படுத்தியது. நான்காவது, பெய்சிங் ஒலிம்பிக் கிராமத்தின் வரவேற்பு விழா மிகச்சிறந்தானது என்று Deng Yaping அம்மையார் எடுத்துக்கூறினார்.
பெய்சிங் ஒலிம்பிக் கிராமம், மிக அழகான ஒலிம்பிக் கிராமமாகும். சீன மக்கள் இதற்கு பெருமை அடையும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் Jacque Roggeஉம் கூறினார்.
|
|