• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-15 18:33:33    
ஒலிம்பிக் பதக்க வரிசை

cri

பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி 7வது நாளில் நுழைந்துள்ளது. 15ம் நாள் பிற்பகல் 5:30 மணி வரை, 9 தங்கம் பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இன்று நிறைவடைந்த 200 மீட்டர் மகளிர் கவிழ்ந்த பாணி நீச்சலின் இறுதிப் போட்டியில், அமெரிக்க வீராங்கணை Rebecca Soni தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.

200 மீட்டர் ஆடவர் மல்லாந்த பாணி நீச்சல் இறுதிப் போட்டியில், அமெரிக்க வீரர் Ryan Lochte தங்கப் பதக்கம் வென்றார்.

காலை நடைபெற்ற 200 மீட்டர் ஆடவர் பல்வகை பாணி நீச்சல் போட்டியில், அமெரிக்க வீரர் மைக்கிள் பில்ப்ஸ் தங்கப் பதக்கத்தை தட்டிச்சென்றார்.

முற்பகல் நிறைவடைந்த 100 மீ்ட்டர் மகளிர் சுதந்திரப் பாணி நீச்சல் இறுதிப் போட்டியில், ஜெர்மனி வீராங்கனை Britta Steffen தங்கப் பதக்கம் பெற்றார்.

50 மீட்டர் ஆடவர் படுத்துகொண்டு குழல் துப்பாக்கி சுடும் இறுதிப் போட்டியில் உக்ரேன் வீரர் Artur Ayvazian தங்கப் பதக்கம் வென்றார்.

தனி நபர் பல்வகை சீருடற்பயிற்சி இறுதி போட்டியில் அமெரிக்க வீராங்கனை லியுகின் சிறப்பாக விளையாடி, தங்கப்பதக்கம் பெற்றார். சீன வீராங்கனை யாங் யீ லின் வெண்கல பதக்கம் பெற்றார்.

ஆடவர் இரட்டையர் கரைபுரண்டோடும் நீரில் வள்ள ஓட்டத்தில், ஸ்லோவாக்கியாவின் வீரர்கள் Pavol Hochschorner, Peter Hochschorner தங்கப் பதக்கத்தைப் பெற்றனர்.

கரைபுரண்டோடும் நீரில் மகளிர் ஒற்றையர் சிறுவள்ளப் போட்டியில் ஸ்லோவாக்கியாவின் வீராங்கணை Elena Kaliska தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.

மகளிர் 75 கிலோ எடைப் பிரிவு பளுத்தூக்கலில், சீன வீராங்கணை Cao Lei தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.