பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி இன்று 8வது நாளாக நடைபெறுகின்றது. இன்று மொத்தம் 29 தங்க பதக்கங்கள் போட்டிகளின் மூலம் உருவாக்கப்படும். பெய்ஜிங் நேரம் பிற்பகல் 3 மணி வரை 7 தங்கப் பதக்கங்கள் உருவாக்கப்பட்டன.
200 மீட்டர் மகளிர் மல்லாந்த பாணி நீச்சல் போட்டியில் சிம்பாபுவே வீராங்கனை கிஸ்டி தங்கப் பதக்கம் பெற்று உலக சாதனையை உருவாக்கினார்.
100 மீட்டர் ஆடவர் வண்ணத்துபூச்சி பாணி நீச்சல் போட்டியின் தங்க பதக்கத்தை அமெரிக்க வீரர் பிஃல்புஸ் மிச்செல் பெற்றார். இது அவர் நடப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பெற்ற 7வது தங்க பதக்கமாகும்.
செர்விய வீரர் ஷாவிஜி மிதோராட் வெள்ளி பதக்கத்தையும் ஆஸ்திரேலிய வீரர் லோதெஸ்டின் வெண்கல பதக்கத்தையும் பெற்றனர்.
800 மீட்டர் மகளிர் சுதந்திர பாணி நீச்சல் போட்டியில் 19 வயதான பிரிட்டன் வீராங்கனை அட்லிடன் ரெபெக்கா தங்க பதக்கம் பெற்று உலக சாதனையின் பதிவை முறியடித்தார். அட்லிடன் ரெபெக்கா நடப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் 400 மீட்டர் மற்றும் 800 மீட்டர் தூர சுந்திர பாணி நீச்சல் போட்டிகளின் தங்கப் பதக்கங்களை வென்றார்.
இத்தாலி வீரர் எவான்ஸ் வெள்ளி பதக்கத்தையும் தெமாக் வீரர் பிஃதிப்பி அலேசியா வெண்கல பதக்கத்தையும் பெற்றனர்.
20 கிலோமீட்டர் ஆடவர் நடைப் போட்டியில் ரஷிய வீரர் பொர்ச்சின் வலெரி தங்கப் பதக்கம் பெற்றார்.
எக்குவடோர் வீரர் பெரேஸ் வெள்ளி பதக்கத்தையும் ஆஸ்திரேலிய வீரர் டால்லண்ட் வெண்கல பதக்கத்தையும் வெற்றனர்.
50 மீட்டர் ஆடவர் சுதந்திர பாணி நீச்சல் போட்டியில் பிரேசில் வீரர் சிலோ பிஃல்ஹொ செஷார் தங்கப் பதக்கம் பெற்று உலக சாதனையின் பதிவை முறியடித்தார்.
பிரான்ஸ் வீரர் லெவோக்ஸ் வெள்ளி பதக்கத்தையும் அவர்தம் சகோதரர் பெர்னார்ட் வெண்கல பதக்கத்தையும் பெற்றனர்
25 மீட்டர் ஆடவர் கை துப்பாக்கி சுடும் போட்டியில் உக்ரேன் வீரர் பிட்லீவ் தங்கப் பதக்கம் பெற்றார்.
ஜெர்மன் வீரர் சுமன் வெள்ளி பதக்கத்தையும் அவர்தம் சகோதரர் கரிஸ்தியான் வெண்கல பதக்கத்தையும் பெற்றனர்.
பூப் பந்து மகளிர் ஒற்றையர் இறுதி போட்டியில் சீன வீராங்கனை ச்சான் நின் தங்க பதக்கத்தை பெற்றார். அவர்தம் சகோதரி சியெ சிங் பாஃன் வெள்ளி பதக்கம் பெற்றார்.