தங்க பதக்கம் பெறுவது, சீன விளையாட்டுப் பிரதிநிதிக்குழுவின் ஒரேயொரு இலக்கு அல்ல. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி மூலம், பல்வேறு நாடுகளின் விளையாட்டு வீரர்களுடன் தொடர்ப்பையும் நட்புறவையும் வலுப்படுத்தி, ஒலிம்பிக் எழுச்சியை வெளிக்கொணர வேண்டுமென சீனா விரும்புகிறது. சீனப் பிரதிநிதிக் குழு, வேறு நாடுகள் மற்றும் பிரதேசங்களின் விளையாட்டு வீரர்களுடன் இணைந்து, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி வெற்றிக்கு ஆக்கப்பூர்வமாக முயற்சி செய்யும்.
ஆக்ஸ்ட் 17ம் நாள் பெய்ஜிங் ஒலிம்பிக் முக்கிய செய்தி மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், சீனப் பிரதிநிதிக்குழுவின் துணைத் தலைவர் CUI DA LIN பேசுகையில், இவ்வாறு தெரிவித்தார். பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் முன்பாதியில், தங்கப் பதக்க வரிசையில், சீனா முதலிடம் பெற்றுள்ளது. ஆனால், பிற்பாதியில், சீன விளையாட்டு வீரர்கள் தங்க பதக்கத்தை பெறும் வேகம் மெதுவாக மாறும் என்றார் அவர்.
|