• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-17 15:52:33    
9வது நாள் போட்டிகளின் நிலைமை

cri

ஆக்ஸ்ட் 17ம் நாள் பெய்ஜிங் ஒலிம்பிக் தொடங்கிய 9வது நாளாகும். பிற்பகல் 3 மணி வரை, 7 தங்க பதக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் மகளிர் மாரத்தான் ஓட்ட பந்தயம் இன்று காலை பறவை கூடு விளையாட்டு அரங்கில் நிறைவடைந்தது. ருமேனிய வீராங்கனை Tomescu Constantina 2 மணி 26 நிமிடம் 44 வினாடி என்ற சாதனையுடன் தங்க பதக்கத்தை வென்றார்.

50 மீட்டர் மகளிர் சுதந்திர பாணி நீச்சல் இறுதி போட்டியில், ஜெர்மன் வீராங்கனை ஸ்தேபெஃன் பிரிட்டா, 24.06 வினாடி என்ற சாதனையுடன் தங்க பதக்கத்தைப் பெற்று, ஒலிம்பிக் சாதனையின் பதிவை முறியடித்தார்.

1500 மீட்டர் ஆடவர் சுதந்திர பாணி நீச்சல் இறுதி போட்டியில், டூனிஸின் வீரர் மெரூலி ஒசாமா, 14 நிமிடம் 40 வினாடி 84 மணித்துளிகள் என்ற சாதனையுடன் தங்க பதக்கத்தைப் பெற்றார். ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் டூனிஸ் தங்கப் பதக்கம் பெறுவது, இதுவே முதல்முறையாகும்.

400 மீட்டர் ஆடவர் பல்வகை பாணி தொடர் நீச்சல் போட்டியில், புகழ்பெற்ற வீரர் பெஃல்புஸ் அடங்கும் அமெரிக்க அணி, தங்க பதக்கத்தைப் பெற்று, உலக சாதனையின் பதிவை முறியடித்தது.

50 மீட்டர் ஆடவர் இறுதி துப்பாக்கி சுடம் போட்டியின் தங்க பதக்கத்தை, சீன வீரர் ச்சியு சியான் பெற்றார். உக்ரேன் வீரர் SUKHORUKOV வெள்ளி பதக்கத்தையும், ஸ்ரோவெனிய வீரர் DEBEVEC வெண்கல பதக்கத்தையும் பெற்றனர்.