2008ம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 8ம் நாள் இரவு, பெய்ஜிங் மாநகரில் எவரும் தூங்கவில்லை. நீயும் நானும் என்ற பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தலைப்புப் பாடல், பறவைக் கூடு என்ற சீன தேசிய விளையாட்டரங்கின் மேல் வானில் நீண்டநேரம் எதிரொலித்து கொண்டிருந்தது. மிதமான இசையுடன், சீனாவின் புகழ் பெற்ற பாடகரான liuhuanனும், பிரிட்டனின் புகழ் பெற்ற பாடகியான sarah brightman னும், தங்களது இனிமையான குரலில் இந்த தலைப்புப் பாடலை பாடினர். உலகின் அமைதி மற்றும் அன்பை எடுத்துக்காட்டி, ஓர் உலகம், ஒரு கனவு என்ற ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தலைப்பை இப்பாடல் பன்முகங்களில் வெளிப்படுத்தியுள்ளது.

"நீயும் நானும், ஒரே உலக சேந்தவர்கள், கனவால், ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவிலிருந்து, பெய்ஜிங் மாநகரில் சந்திப்போம். நண்பர்களே, கைகளை இணைத்து எப்போது ஒரே குடும்பமாக வாழ்வோம் என்று இப்பாடல் ஒலித்து.

இப்பாடலின் எளிதான சொற்கள், அழகான தாளம் ஆகியவை, மனித குலம் ஒரே குடும்பமாகும் என்ற இப்பாடலின ஆழமான கருத்தை பரவல் செய்தது. liuhuan, sarah brightman இருவரின் இந்த பாடல் வரிகள், மக்கள் மனதில் ஆழப்பதிந்துள்ளன.

நீயும் நானும் என்ற பாடல் மூலம், சீன மக்களின் பாரம்பரிய கருத்துகளில் இடம் பெறும். இணக்கம் என்ற கருத்து சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டது. இப்பாடல், இணக்கம், அமைதி அல்லது போர் இல்லாத சிந்தனையை பரவல் செய்கிறது. இது, சீன மக்களின் விருப்பம் மட்டுமல்ல, உலக மக்கள் நாடும் குறிக்கோளுமாகும் என்று இப்பாடலின் ஆசிரியர் அறிமுகப்படுத்தினார்.

நண்பர்களே, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தலைப்புப் பாடல் என்ற தகவலைப் படித்த பின், உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். உங்களுக்கு இந்தத்தகவல் பிடித்திருக்கும் என்று நம்புகின்றோம். நன்றி!மீண்டும் சந்திப்போம்.
|