நேற்றிரவு, பெய்ஜிங் ஒலிம்பிக் மகளிர் மேசை பந்து குழு போட்டியின் இறுதிப் போட்டியை, சீன அரசுத் தலைவர் ஹுசிந்தாவ், தம் மனைவியார் லியூ யூங் சிங்குடன், கண்டுகளித்தார்.
சீன அணிக்கும் சிங்கப்பூர் அணிக்குமிடையில், இப்போட்டி நடைபெற்றது. 3:0 என்ற ஆட்டக்கணக்கில், சீன அணி, சிங்கப்பூர் அணியைத் தோற்கடித்து, தங்கப் பதக்கத்தைப் பெற்றது. சிங்கப்பூர் அணி, வெள்ளிப் பதக்கத்தையும், தென் கொரியக் அணி, வெண்கலப் பதக்கத்தையும் பெற்றன.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் Rogge மற்றும் அவரது மனைவியாரும், இப் போட்டியைக் கண்டுகளித்தனர்.
|