• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-18 09:41:20    
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு சீனாவிலுள்ள இந்தியா தூதரின் நல்வாழ்த்துக்கள் 2

cri
மிகப்பெரிய வளரும் நாடான சீனா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்துவது என்பது சீனா உள்ளிட்ட வளரும் நாடுகளின் பெருமையாகும் என்று நிருபமா ராவ் அம்மையார் கூறினார். சீனா மீதான நட்பார்ந்த உணர்வுடன், பல்வேறு நாடுகளின் வீரர்கள், அதிகாரிகள், பயணிகள் ஆகியோர் பெய்சிங்கிற்கு வந்து,

இந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்வார்கள் என்று அவர் நம்புகின்றார். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், தனது நாட்டு தனிச்சிறப்பியல்பை வீரர்கள் எடுத்துக்காட்டுவார்கள்.
இந்திய-சீன உறவு தொடர்ந்து வளர்ந்து வருகின்றது. இரு தரப்புகளுக்கிடையிலான பரிமாற்றம் உள்ளும் புறமும் அதிகரித்து வருகின்றது. இவ்வாண்டின் ஜனவரி திங்கள், இந்தியத் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் சீனாவில் பயணம் மேற்கொண்ட போது, 2008 பெய்சிங் ஒலிம்பிக் அரங்குகளின் மாதிரிகளை சிறப்பாக பார்வையிட்டார்.

அத்துடன், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார் என்று நிருபமா ராவ் அம்மையார் கூறினார். சீன-இந்திய உறவின் வளர்ச்சியை முன்னேற்றும் முக்கிய வாய்ப்பாக பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி மாறும் என்று அவர் கருதுகின்றார்.
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், இந்திய-சீன வீரர்கள், பயணிகள் மற்றும் அதிகாரிகள் தொடர்பையும் பரிமாற்றதையும் வலுப்படுத்தி, இரு நாட்டுறவின் வளர்ச்சியை தொடர்ந்து தூண்டுவார்கள் என்றார் அவர்.
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான சிறப்பான வாழ்த்துக்களை நிருபமா ராவ் அம்மையார் தெரிவித்தார்.

பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வெற்றிகரமாக நடைபெற வேண்டுமென நான் இதயபூர்வமாக வாழ்த்துகின்றேன். சீன அரசு மற்றும் மக்களின் முயற்சிகள் சிறந்த பயனைப் பெறும். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், பல்வேறு நாடுகளின் வீரர்கள் மற்றும் பயணிகள் முழுமையான மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும் என்றார் அவர்.
11ம் நாள் நடைபெற்ற பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு 10 மீட்டர் ஆடவர் குழல் துப்பாக்கி சுடும் போட்டியில், இந்திய விளையாட்டு வீரர் bindra abhinav தங்கப் பதக்கம் வென்றார். இத்தங்கப் பத்தம், தனி நபர் ஆட்டத்தில்இந்திய வரலாற்றில் பெற்ற முதல் தங்கப் பதக்கமாகும்.