ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான பின்னணி சேவையின் உத்தரவாதம், செய்தி ஊடகட் சேவை முதலியவற்றைச், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் Rogge புகழ்ந்து பாராட்டினார். பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின், முதல் வாரத்தின் ஏற்பாட்டுப் பணி, மிகச் சிறப்பானது என்று அவர் கருத்து தெரிவித்தார். அண்மையில், பிரான்சின் 《L'equipe》என்ற செய்தியேட்டு அளித்த பேட்டியில், Rogge இவற்றை தெரிவித்தார். பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி சிறப்பாக நடைபெற்றது. போக்குவரத்து நன்றாக இருக்கிறது. ஒலிம்பிக் கிராமம், அழகாக இருக்கிறது. போட்டியின் ஒளிபரப்பு, மிகச் சிறப்பானது என்று, அவர் கூறினார்.வீரர்கள் வசதியாக போட்டியில் கலந்துகொள்ள, சுற்றுச்சூழலின் கட்டுப்பாட்டில், பல கண்டிப்பான பயன்மிக்க நடவடிக்கைகளைச் சீனா மேற்கொண்டது என்று Rogge தெரிவித்தார். இது வரை, சீனாவின் ஏற்பாட்டுப் பணி பற்றி, மிகப் பெரும்பாலான செய்தி ஊடகங்கள், மனநிறைவு தெரிவித்தன என்றும் அவர் கூறினார். ஒலிம்பிக் துவக்க விழாவையும், அவர் வெகுவாக பாராட்டினார்.
|