இது வரை, பெய்சிங் ஒலிம்பிக் தொண்டர்களின் சேவை குறித்து, மக்கள் மனநிறைவு அடைந்தனர்.
இன்று பெய்சிங் சர்வதேசச் செய்தி மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தொண்டர் விவகாரத்துக்கு பொறுப்பான பெய்சிங் ஒலிம்பிக் அமைப்புக் குழுவின் துணைத் தலைவர் Liu Jian இவ்வாறு தெரிவித்தார்.
பெய்சிங் ஒலிம்பிக் அமைப்புக் குழுவின் தலைவர் Liu Qi, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் Jacques Rogge, சர்வசே ஊனமுற்றோர் ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் Philip Craven ஆகியோர், பெய்சிங் ஒலிம்பிக் தொண்டர்களின் சேவையை வெகுவாக பாராட்டினர் என்று Liu Jian கூறினார்.
தவிர, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுக்கு பின், சிறப்புப் பயிற்சி பெற்றுள்ள சுமார் 30 ஆயிரம் ஒலிம்பிக் தொண்டர்கள், தொடர்ந்து பெய்சிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்குச் சேவை வழங்குவர் என்று தெரிய வருகின்றது.
|