• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-19 10:10:11    
வடமேற்கு சீனாவில் ஒரு சாதாரண உணவு வகை 2

cri
வாணி – முதலில், ஆட்டிறைச்சியை நீரில் நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். பிறகு, அதனை துண்டு துண்டுகளாக வெட்டிட்டு வையுங்கள். சோயா சாஸ், சமையல் மது ஆகியவற்றுடன் ஆட்டிறைச்சி துண்டுகளை நன்றாக பிசைக்கவும்.

க்ளீட்டஸ் – காளான், கேரட், பச்சை மிளகாய் ஆகியவற்றை சிறிய அளவாக நறுக்கி கொள்ளுங்கள்.
வாணி – வெங்காயத்தை நறுக்கி கொள்ளும் போது, அதிலிருந்து கண்ணீர் வடிய செய்யும் சுரப்பி வெளியேறும். அதனை சமாளிக்க இன்று ஒரு எளிதான உத்தியை எடுத்துக்கூறுகின்றேன். நீரில் போட்டால், அந்த சுரப்பி கரைந்து போகும். ஆகையால், வெங்காயத்தை நறுக்கும் போது, பக்கத்தில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை தயாராக வைத்துக் கொண்டு அரிய தொடங்குங்கள், சரியா!

க்ளீட்டஸ் – அடுத்து, அடுப்பின் மீது வாணலியை வையுங்கள். அதில் சிறிதளவு சமையல் எண்ணெய் ஊற்றவும். பிறகு, நறுக்கப்பட்ட வெங்காயம், கேரட், காளாண், பச்சை மிளகாய் ஆகியவற்றை முறையே வாணலியில் கொட்டி நன்றாக வதக்கவும்.
வாணி – நன்றாக வதக்கிய பின், வாணலியில் சுமார் ஒரு லிட்டர் தண்ணீரை ஊற்றவும். உப்பு, சோயா சாஸ், ஆகியவற்றை அதில் சேர்க்கவும். மிதமான சூட்டில் வேகவிடுங்கள். இறுதியில், சுவை சேர்க்கும் monosodium glutamateஐ அதில் சேர்க்கலாம். க்ளீட்டஸ் நீங்கள், அரிசியை சுத்தம் செய்யுங்கள்.
க்ளீட்டஸ் – செய்கின்றேன். வாணி, நீங்கள் தயாரிப்பது ஒரு வகை சூப் போன்றல்லவா இருக்கிறது?

வாணி – பொறுமையுடன் இருங்கள். இன்று நாம் ஒரு பட்டாணி வகை தயாரிக்க போகின்றோம். அல்லவா? அரிசி சுத்தம் செய்தாகிவிட்டதா?
க்ளீட்டஸ் – அரிசி தயார்.
வாணி –சுத்தம் செய்த அரிசியை நான் தயாரித்த சூப்பில் கோடுங்கள்.
க்ளீட்டஸ் – ஓ. இப்போது எனக்கு புரிக்கிறது. இன்று பட்டாணி தயாரிப்பதற்குத் தண்ணீர் தேவையில்லை. சூப் போதும்.
வாணி – நீங்கள் சொன்னது சரி. இறுதியில் மறவாமல், ஆட்டிறைச்சி துண்டுகளை அது மேல் வைக்கலாம். பிறகு, வழக்கம் போல பட்டாணியை தயாரிக்கலாம்.

க்ளீட்டஸ் – சுமார் 40 நிமிடங்களுக்குப் பிறகு, இன்றைய ஆட்டிறைச்சி பட்டாணி தயார். ருசிப்பார்ப்பதற்கு முன், அதனை நன்றாக கிளறவும்.
வாணி – பட்டாணியில் இறைச்சி, காய்கறி ஆகியவை இடம்பெறுவதால் சத்து மிக்கதாக இருக்கின்றது.