கலை: உலக விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. வானொலிப் பணியில் தங்கப்பதக்கங்களை வெல்ல எப்போதும் உறுதுணையாய் நிற்கும் உங்கள் அனைவரது ஆதரவிற்கும் நன்றி கூறி இன்றைய நேயர் நேரம் நிகழ்ச்சிக்கு செல்கிறோம்.
......நிகழ்ச்சியின் தொடக்க பகுதியில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருப்பதை பாராட்டும் நேயர்களின் கருத்துக்களை கேட்டு ரசியுங்கள். .........மீனாட்சி பாளையம் க அருன் திருவிழாவை கண்ட பின் தெரிவித்த பாராட்டு கருத்தை கேளுங்கள். ........அடுத்து நாமக்கல் மாவட்ட பாஸட்ட கிராமத்தில் வாழ்கின்ற ஏமஸ் கண்ணன் அவரின் ஊரிலிருந்து தொலைக் காட்சி மூலம் ஒலிம்பிக் திருவிழாவை கண்ட பின் தெரிவித்த கருத்தை கேளுங்கள். ........ஈராடு உஞ்சலூர் பசுபதி வெண்கடேஸ்வரன் தெரிவித்த கருத்தை கேளுங்கள். ........ விழுப்புரம் எஸ் சேகர் திருவிழாவை கண்டு இரசித்த பின் தெரிவித்த கருத்தை கேளுங்கள். மின்னஞ்சல் பகுதி இலங்கை M.S.M. இர்ஷத் சீன வானொலியின் 45வது ஆண்டு நிறைவுக்கு வாழ்த்துக்கள். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி சிறப்பாக நடைபெறவேண்டும் என்பது எங்கள் விருப்பம். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் நாங்கள் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளை பார்த்து மகிழ்வோம்.
திருச்சி மு. பரத்வாஜ் "2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகள் நல்லபடி நடைபெறவேண்டும் எனபதே எங்கள் அனைவரது விருப்பமும், இறைமன்றாட்டும். இதில் பங்கேற்கும் அனைத்து விளையாட்டு வீரர்களும் சிறப்பான சாதனைகள் புரிய வாழ்த்துகிறோம். .......வளவனூர் முத்துசிவக்குமரன்....... (1.8.2008) பிற்பகல் ஒலிம்பிக் கிராமத்தில் அமைதி மற்றும் நட்புறவை அடையாளப்படுத்தும் சுவர் எழுப்பப்பட்டிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. ஈராக் ஒலிம்பிக் பிரதிநிதிக்குழுவையும் பீஜிங் ஒலிம்பிக்கில் பங்கு கொள்ள அனுமதி அளித்திருப்பது வரவேற்கத் தக்கதாகும். அனைத்து நாட்டு விளையாட்டு வீரர்களும் போர் எதிர்ப்பு முழக்கங்களை இந்த சுவற்றில் பதிவு செய்து உலக நாடுகள் அனைத்தையும் ஒரே குடையின் கீழ் வருவதற்கான முன்னோடிகளாய் செயல்படவேண்டும். ஐந்து கண்டங்களின் நண்பர்களும் ஒலிம்பிக் மூலம் புரிந்துணர்வை வலுப்படுத்தி நட்பை ஆழமாக்க வேண்டும் என்று திரு. ஹூ சிந்தாவ் அவர்கள் வலியுறுத்தியிருப்பது மிகவும் நன்று.
......யாழ்பாணம் பாலா ஈசன்...... பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளை சிறப்பாக நடத்துவதற்காக மிகவும் முனைப்புடன் செயற்பட்டு வருகிறது. முன்னதாக, சீனத் தலைமை அமைச்சர் வென்சியாபாவ் பெய்ஜிங் ஒலிம்பிக் திடல்கள் மற்றும் அரங்குகளையும், சாதனங்களையும் பார்வையிட்டார். பல்வேறு பணிகளை செவ்வனே செய்து சர்வதேசச் சமூகமும், விளையாட்டு வீரர்களும் மனநிறைவு அடையச் செய்யும் வகையில் பெய்ஜிங் ஒலிம்பிக்கை நடத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஒலிம்பிக் போட்டிகளைக் கண்டுகளிப்பதற்காக மிகவும் ஆவலோடு உள்ளோம். அமெரிக்கா ஆல்பர்ட் "ஓர் உலகம் ஒரு கனவு "எனும் சர்வதேச சமூக ஒற்றுமை உணர்வை வலியுறுத்தும் கொள்கை முழக்கத்துடன் துவங்கயிருக்கும் 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, உலகமேவியக்கும் வண்ணம் மிகச் சீரும் சிறப்புமாக நடைபெற வாழ்த்துக்களை தெரிவிப்பதில் உவப்பெய்துகிறேன். சிறுநாயக்கன்பட்டி கே.வேலுச்சாமி உலகமே ஆவலுடன் நீண்ட நாளாக எதிர்பார்த்து கொண்டிருந்த கோடைக்கால ஒலிம்பிக் போட்டி பெய்ஜிங்கில் துவங்கி இருப்பதை கண்டு நான் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டி உலக ஒலிம்பிக் வரலாற்றில் முழுக்க
முழுகக அறிவியல் தொழில் நுட்பத்தை பயன் படுத்திய ஒலிம்பிக் போட்டியாக மாறும். இரண்டு வார காலத்திற்கு உலகையே தன் கட்டுக்குள் வைத்திருக்கக்கூடிய பெய்ஜிங் ஒலிம்பிக்போட்டி வெற்றிகரமாக நடைபெறவும், பதக்கப்பட்டியலில் சீன அணி முதலிடம் பெறவும் வாழ்த்துகின்றேன். ……திருச்சி அண்ணா நகர் வி.டி.இரவிச்சந்திரன்……. ஜூலை 28 செய்தித் தொகுப்பு நிகழ்ச்சி கேட்டேன். சுவையான பல்வகை பண்பாட்டு நடவடிக்கைகள், கலைகளில் சிறந்தது சீனா. சாதாரண விழா என்றாலே அங்கே ஒரு நடனமோ, நாட்டியமோ இடம்பெறாமல் இருக்காது. தற்போது உலகத் திருவிழாவாக ஒலிம்பிக் போட்டி பெய்ஜிங்கில் நடைபெறுகிறது. இதனை சிறப்பிக்கும் வகையிலும் உலகின் மூலை முடுக்குகளிலிருந்து வந்துள்ள பயணிகளை மகிழ்விக்கும் வகையிலும் பல பண்பாட்டு நடவடிக்கைகளில் சீனா ஈடுபடும் என்பதை சொல்லவும் வேண்டுமா? திரும்பும் இடமெல்லாம் பயணிகளை மகிழ்விக்கும் பல்வகை பண்பாட்டு நடவடிக்கைகள் மனமகிழ்ச்சியை தருவது உண்மைதான்.
.....சர்வதேச தமிழ்ப்பணி மன்றம், பொன்.ஏழிசை வல்லபி..... வணக்கம். சீன வானொலி தமிழ்ப்பிரிவின் 45 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, நேயர்கள் பலர் தெரிவித்த வாழ்த்துரைகளைக் கேட்டு மகிழ்ந்தேன். சீன வானொலியி்ன் நலன் மீது அக்கறை கொண்ட நேயர்கள் ஏராளம் ஏராளம் என்பதை அறியும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, மேலும், நேயர்களும், பணியாளர்களும் ஒரு குடும்பம் போல இருப்பதை அறியும்போது பெருமையாகவும் இருக்கிறது. பாண்டிச்சேரி என். பாலகுமார் உலகத்தின் வேகமான வளர்ச்சியோடு சீன வானொலியும் ஈடுகொடுத்து வளர்ந்துள்ளது. 5 ஒலிம்பிக் வளையம் போல உள்ள சீன வானொலியின் தரம், துல்லியம், ஊக்கம், ஆர்வம், கடமை ஆகியவையே வளர்ச்சிக்கு வித்திட்டன என்று கூறலாம். தமிழ்ப்பிரிவின் வளர்ச்சியோடு நேயர்களாகிய நாம் ஈடுகொடுத்து வளர்ந்து வருகிறோம் என்பதில் ஐயமில்லை. அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்ப்பிரிவு தனது பொன்விழாவை சிறப்பாக கொண்டாடும்போது, நேயர்களுடன், சீன வானொலி பணியாளர்களும் சேர்ந்து சிறப்பான ஒரு விழாவை நடத்தி கொடுக்க வேண்டுகிறேன்.
க்ளீட்டஸ்: பஞ்சநதிக்குளம் த. மணிகண்டன் எழுதிய கடிதம். செய்திச்சுடரில் விருந்தளித்து, எங்கள் மனதில் ஆழப்பதிந்த சீன வானொலியில் சர்க்கரை நோய் பற்றிய தகவல்களை அறிவியல் கல்வி மற்றும் நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சியில் கேட்டேன். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மன அமைதியுடன் இருக்கவேண்டும், உடற்பயிற்சிகள் செய்யவேண்டும் என்ற தகவல் பயனுள்ளது. அவ்வாறே அனைத்து நோய்களுக்கும் குணமாக்கும் வழிமுறைகளை கூறினால் பயனுள்ளதாக இருக்கும். கலை: சென்னை 5 எஸ். ரேணுகாதேவி எழுதிய கடிதம். சீன உணவு அரங்கம் நிகழ்ச்சியில் பயறு இனிப்பு பற்றிய வித்தியாசமான தகவல் கேட்டேன். நிகழ்ச்சியில் சீனப் பழரச வகைகள், மூலிகை உணவுகள், பண்பாட்டு அம்சம் கொண்ட உணவுகளை பற்றியும் அறிமுகப்படுத்தினால் நலம். க்ளீட்டஸ்: குமரி மாவட்டம் இலவுவிளை ஜெயராஜ் எழுதிய கடிதம். செய்தித்தொகுப்பு நிகழ்ச்சியில் ஊனமுற்றோருக்கான ஒலிம்பிக் போட்டியின் நிலைப்பாடு என்ற தலைப்பில், ஊனமுற்றோருக்கான ஒலிம்பிக் பற்றி கூறப்பட்ட தகவல்களை கேட்டேன். மண்வளம் பற்றிய அறிவியல் உலகம் நிகழ்ச்சியும் சிறப்பாக இருந்தது. எல்லா தேவைகளுக்கும் இயற்கையை நம்பியுள்ள நாம் மண்வளத்தை பாதுகாப்பது மிகவும் அவசியமாகும்.
கலை: விழுப்புரம் சிவக்குமர் எழுதிய கடிதம். ஜொல்மோலங்மா சிகரத்தில் ஒலிம்பிக் தீபம் ஏறியது சிறப்புக்குரிய நிகழ்வாகும். உலகின் உயரமான மலைச்சிகரத்தில் ஒலிம்பிக் தீபம் ஏறுவது இதுவே முதன்முறை. கடும்குளிர், ஆக்சிஜன் எனும் உயிர்வாயுவின் பற்றாக்குறை என கடும் இன்னல்களை சமாளித்து ஒலிம்பிக் தீபம் சிகரந்தொட்டது சீன மக்களின் மாபெரும் சாதனையாகும். கலை: மச்சுவாடி கிருஷ்ணமூர்த்தி எழுதிய கடிதம். மலர்ச்சோலை நிகழ்ச்சியில் உலகில் பல உயிரினங்கள் அழியும் விளிம்பிலும், அழிந்தும் உள்ளன என்பதை புள்ளிவிபரங்களோடு வழங்கப்பட்டது. உயிரின பன்மைத்தன்மையை காக்கவேண்டிய கட்டாயம் பற்றி வலியுறுத்திய அந்த தகவல் நம்மை ஆழமாக சிந்திக்கத் தூண்டுகிறது.
|