• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-19 19:03:19    
உலகை நோக்கியுள்ள சீனா

cri

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி உலகிற்கு சீனாவின் ஒரு அடையாளமாக மாறுவது திண்ணம். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி துவங்கு வதற்கு முன் சீனா பொருளாதாரத்தின் மூலம் உலகுடன் இணைந்துள்ளது. சமூகம் பண்பாடு ஆகியவற்றின் மூலம் சீனா உலகுடன் இணையும் இன்னொரு காலக் கட்டமாக பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி திகழ்கின்றது என்று சீனாவின் செய்தி ஊடகம் ஒன்று வெளியிட்ட விமர்சனக் கட்டுரையில் கருத்து தெரிவித்துள்ளது. இது பற்றிய கருத்து இதர செய்தி ஊடகங்களின் கருத்துகளுக்கு பொருந்தியுள்ளது. 7 ஆண்டுகளுக்கு முன் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்தும் உரிமையை சீனா பெற்ற பின் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள்,

இப்போது நடைபெற்றுவருகின்ற பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் காட்டப்படுகின்ற செழுமையான சர்வதேச அம்சங்கள் ஆகியவை கடந்த 30 ஆண்டுகால திறப்பு மற்றும் சீர்திருத்தம் மேற்கொண்டுள்ள சீனா மேலும் உற்சாகத்துடன் உலகுடன் இணைவதை மக்கள் நம்ப துணை புரிகின்றன. சீனா உலகை நோக்கி முன்னேறுவதன் அடையாளமாக பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி எடுத்துக்காட்டுவதில் ஐயமில்லை. 7 ஆண்டுகளுக்கு முன் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் சமராஞ்சி 2008ம் ஆண்டு 29வது கோடைகால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி பெய்ஜிங்கில் நடத்துவதென்ற தீர்மானத்தை அறிவித்தமை சீன மக்களுக்கு மகிழ்ச்சி மட்டுமல்ல கடினமான கடப்பாட்டையும் கொண்டு வந்தது. 7 ஆண்டுகளுக்கு பின் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி துவங்குமுன் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் நடப்பு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் ரோக் மக்களுக்கு இத்தகைய எண்ணத்தை தெரிவித்தார்.

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்தும் உரிமை பெய்ஜிங்கிற்கு வழங்குவதில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு வருத்தம் இல்லை. ஆகஸ்ட் 8ம் நாள் நெருங்கிய வேளையில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் மாபெரும் ஈர்ப்பு ஆற்றலும் அருமையான ஏற்பாட்டு பணியும் சர்ச்சை அனைத்தையும் தோற்கடித்துள்ளன என்று ரோக் கூறினார். இவையனைத்தும் சீனா சர்வதேச சமூகத்திற்கான கடப்பாட்டை சுயவிருப்பத்துடன் நிறைவேற்றியுள்ளதை எடுத்துக்காட்டுகிறது என்று கூறினால் மிகையாகாது. பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் மையக் கருத்தாக உறுதிப்படுத்தப்பட்ட சிந்தனை மற்றும் எண்ணம் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் மீதான சீனாவின் சீரிய கருத்தை முழுமையாக வெளிகாட்டியுள்ளன. இது பற்றி சீன அரசுத் தலைவர் கருத்து வெளியிட்டார். அவர் கூறியதாவது.

ஓர் உலகம் ஒரு கனவு என்ற முழக்கம் ஒலிம்பிக் எழுச்சியை மையமாக காட்டியுள்ளது. பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் நோக்கத்தையும் இது வெளிப்படுத்துகின்றது. இந்த முழக்கம் ஒலிம்பிக்கின் மேலான எங்கள் உண்மையான விருப்பத்தை காட்டுகின்றது. அதாவது சீன மக்கள் உலக மக்களுடன் இணைந்து ஒலிம்பிக் எழுச்சியுடன் பரிமாற்ற ஒத்துழைப்பை வலுப்படுத்த விரும்புகின்றனர். சர்வதேச ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் புதிய அத்தியாயத்தை பொறித்து மனித குலத்தின் மேலும் அருமையான எதிர்காலத்தை கூட்டாக உருவாக்க சீன மக்கள் விரும்புகின்றனர் என்று சீன அரசுத் தலைவர் ஹுச்சிந்தாவ் தெரிவித்தார். உலக மக்கள் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கவனம் செலுத்தும் அதேவேளையில் சீனாவையும் உற்று கவனித்து வருகின்றனர்.

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி குறுகிய காலத்தில் சீனாவை அறிய உலகத்திற்கு துணை புரிந்துள்ளது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் முன்னாள் சந்தை கண்காணிப்பாளர் மைக்கில் பேனி கூறியதாவது. நான் 15 முறை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுவதில் கலந்து கொண்டுள்ளேன். பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் தான் அதை நடத்தும் நாடு எவ்வளவு முக்கியத்துவம் பெறுகின்றது என்பதை அறிய முடிந்தது. இதர ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் நான் அதை கண்டறிய வில்லை. தற்போது உலகம் முழுவதிலும் சீனாவை பற்றி அறியும் ஆர்வ அலை எழுப்பியுள்ளது. சீனா சர்வதேச சமூகத்துடன் மீண்டும் இணைந்துள்ளது. சீனா உலகத்திற்கு தன்னை வெளிகாட்டும் வாய்ப்பு நடப்பு ஒலிம்பிக் விளையாட்டு போட்டியாகும் என்றார் பேனி.

பல வெளிநாட்டு பயணிகள் சீனாவிலான சுற்றுப் பயண அனுபவத்துடன் சீன வளர்ச்சி மற்றும் மக்களின் நிருந்தோம்பலை உணர்ந்துள்ளனர். அயர்லாந்து பயணி கோன் கூறியதாவது இனிமேல் யாராவது சீனா பற்றி குறைகூறினால் குறைகூறுவதற்கு முன்னால் சீனாவுக்கு சென்று பார்த்துவிட்டு சொல்லுங்கள் என்று நான் அறிவுறுத்துவேன் என்றார் அவர்.