• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-20 09:31:40    
பாத்திரத்தில் விரலிடுவது

cri
சீன மொழியில் பாத்திரத்திற்குள் விரலிடுவது என்ற ஒரு சொற்றொடர் உண்டு. இந்த மரபுச் சொற்றொடருக்கு பின்னணியிலான கதை மற்றும் அதன் பொருளை அறியத் தருகிறோம்.
கிமு 605ம் ஆண்டில் ஷெங் நாட்டு அரசனை சந்திக்க வந்த ச்சூ நாட்டு தூதர்கள், அவருக்கு ஒரு பெரிய ஆமையை அன்பளிப்பாக அளித்தனர். ஷெங் நாட்டு அரசன் அன்பளிப்பாக வந்த அந்த பெரிய ஆமையை சமைக்கும்படி உத்தரவிட்டான். ஆமையை தனது அவையின் உயரதிகாரிகள், பிரபுக்களோடு விருந்துண்பதாக அரசன் திட்டமிட்டான். விருந்திற்கு செல்லும் வழியில், ஷெங் நாட்டு அரசில் உயர் அதிகாரிகளில் ஒருவனான, ஷு குங் தனது சுட்டுவிரல் துடிப்பதைக் கண்டான். தனது சகாவான ஷு ச்சியாவிடம், "எப்போதெல்லாம் இப்படி என் சுட்டுவிரல் துடிக்கிறதோ அப்போதெல்லாம், மிக மிகச்சுவையான உணவருந்தும் வாய்ப்பு எனக்கு கிடைக்கும்" என்று கூறினான். ஷு குங் சொன்ன இந்த சுட்டுவிரல் துடிக்கும் கதை ஷெங் நாட்டு அரசனின் காதுகளை எட்டியது. விருந்துக்கு அனைவரும் வந்திருக்க அரசன் தனக்கு கிடைத்த அன்பளிப்பான பெரிய ஆமையைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவை அனைவருக்கு கொடுத்தான். ஆனால் ஷு குங்கிற்கு சுவையான அந்த உணவை அரசன் அளிக்கவில்லை. ஷு குங் அரசன் தனக்கு உணவில் பங்கு தராததைக் கண்டு கோபமடைந்தான். பசி ஒருபுறம் கோபம் ஒரு புறம். ஆமைக்கறியை கொண்டிருந்த பாத்திரத்திற்குள் தன் விரலை விட்டு, பின் அந்த விரலை தன் வாயில் வைத்து உறிஞ்சிவிட்டு, அங்கிருந்து வெளியேறினான். இதைக் கண்ட ஷென் நாட்டு அரசனுக்கு ஷு குங்கை கொன்று போடும் அலவுக்கு கடுங்கோபமெழுந்தது. சில காலம் சென்றது, தான் கொல்ல நினைத்த ஷு குங்கின் கையாலேயே ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி ஒன்றில் கொல்லப்பட்டான் செங் நாட்டு அரசன்.
பின்னாளில் ran zhi பாத்திரத்திற்குள் விரலிடுவது என்ற சொற்றொடர், தனக்குரிய பங்கை ஒருவர் எடுத்துக்கொள்வதை குறிக்க பயன்படுத்தப்பட்டது.