• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-20 09:37:50    
என் மனதிலான பெய்சிங் ஒலிம்பிக் விளயைட்டுப் போட்டி

cri

இலங்கை அனுப்பிய 8 வீரர்கள் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தடகள விளையாட்டுக்கள், குத்துச்சண்டை, துப்பாக்கி சுடுதல், பூப்பந்து, நீச்சல், பளுதூக்குதல் ஆகிய போட்டிகளில் கலந்துகொண்டுள்ளனர். அவர்களில் நீச்சல் வீரரான Daniel Lee எமது செய்தியாளருக்கு பேட்டி அளித்தார்.

கடந்த சில ஆண்டு காலம் ஆஸ்திரேலியாவில் வாழ்ந்த Daniel Lee சீன வேர்களை கொண்டவர். சீனா என் பிறந்தகமாகும். என் தாத்தா சீனாவில் தான் பிறந்தார். என்னைப் பொறுத்தவரை, நான் பிறந்தகத்துக்கு திரும்பியுள்ளேன் என்றார்.

Daniel Lee சீனாவின் kung fu கலைக்கு நன்கு அறிமுகமானவர். அதை மிகவும் விரும்புபவர். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்வது தனது மேன்மையை நனவாக்கியுள்ளது என்று அவர் கருதுகின்றார். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் நான் கலந்துகொள்வது இதுவே முதன் முறையாகும். அத்துடன், பெய்சிங்கிறகு முதல் முறையாக வந்துள்ளேன் என்றார் அவர்.

பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ளும் வகையில், ஆஸ்திரேலியாவில் 3 ஆண்டுகள் கடினமான பயிற்சியை மேற்கொண்டதாக அவர் கூறினார். அரையிறுதி போட்டியில் நுழைய வேண்டும் என்று Daniel Lee விரும்பினார்.

2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் நீச்சல் போட்டியின் அரையிறுதிப் போட்டியில் நுழைவது என்பது என் இலக்காகுமாம். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் பதக்கத்தைப் பெற்றால், இலங்கை நீச்சல் வரலாற்றில், இது மாபெரும் வெற்றியாகும் என்றார் அவர்.

சீன உணவுப் பொருட்கள் பற்றி பேசிய போது, தாம் சீனரென்றும். சீனாவின் அனைத்து உணவுப் பொருட்களையும் விரும்புவதாகவும் Daniel Lee வலியுறுத்தினார். அடிப்படையில், நான் ஒரு சீனர். சீனாவின் அனைத்து உணவுப் பொருட்களையும் நான் விரும்புகின்றேன் என்றார் அவர்.

போட்டி முடிவடைந்த பின், முதலில் பெருஞ் சுவரை பார்வையிட Daniel Lee விரும்புகின்றார். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு பின், பெருஞ் சுவரை பார்வையிட விரும்புகின்றேன். சீன மக்கள் அனைவரும் பெருஞ் சுவருக்கு செல்ல வேண்டும் என்று என் தந்தை கூறியுள்ளார். எனவே, நான் பெருஞ் சுவருக்குச் செல்வது உறுதி என்றார் அவர்.