• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-21 21:05:39    
இழுவை வண்டி ஓட்டும் கோவேறுகழுதைகள்

cri
எண்ணெய் விலை உயர்வு மக்கள் வாழ்வின் அடித்தளத்தையே ஆட்டம் காண செய்துவிட்டது. அதோடு உணவு தானிய பிரச்சனை உலகளவில் பல்வேறு சிக்கல்களை உருவாக்கி வருகிறது. உயிர்வள எரியாற்றலில் பல ஆய்வுகள் நடத்தப்பட்டதால் தான் உணவுதானிய விலையுயர்வு ஏற்பட்டது என்று விவாதங்கள் தொடர்கின்றன. இப்படியே சென்றால் இதற்கு மாற்று தான் என்ன? அமெரிக்காவின் மத்திய கிழக்கிலுள்ள டென்னசி மாநிலத்து விவசாயி ஒருவர் நல்லதொரு மாற்றுதிட்டத்தை நடைமுறை படுத்தியுள்ளார். இரு கோவேறுக்கழுதைகளை தனது டிராக்டர் எனப்படும் இழுவை இயந்தியரத்தை இழுக்கசெய்து வயலிலுள்ள பயிர்களை எல்லாம் சேகரித்துள்ளார். இழுவை இயந்திரத்திற்கு எரிபொருள் வாங்குவதை விட இரண்டு கோவேறு கழுதைகளை உணவிட்டு பராமரித்துக் கொள்வதற்கு மிகக்குறைவாக தான் செலவாகிறது என்கிறார் அவர். Warren பகுதி விவசாயியான T. R. Raymond பெட்ரோல் செலவிட்டு ஓட்டப்படுகின்ற இழுவை இயந்திரத்தைவிட வேகம் குறைவாக இருந்தாலும் பயன் குறையவில்லை என்கிறார். கடந்த ஆண்டு வாங்கப்பட்ட அந்த கோவேறு கழுதைகள் அவருடைய Dolly, Molly என்ற இருமகன்களால் தான் இழுவை இயந்திரம் இழுக்க பழக்கப்படுத்தப்பட்டது. அவர்கள் தான் கோவேறு கழுதைகள் இழுப்பதற்கு ஏதுவாக இழுவை இயந்திரத்தையும் சீர்செய்துள்ளனர். எரிபொருள் மூலவளத்தின் அதிகமான பயன்பாட்டை குறைப்பதற்கு இது போன்ற நடவடிக்கைள் காலத்தின் கட்டாயம் ஆகிவிட்டன. நாகரீக உலகில் பல ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட ஆடைகளே புதிய அலங்கார ஆடைகளாக வெளிவருவதை போல எரிபொருள் தட்டுபாட்டால் முன்னோர் நாடிய போக்குவரத்து வழிமுறைகளுக்கு நாம் திரும்பினாலும் வியப்பில்லை.