• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-21 09:58:59    
வெளிநாட்டு விருந்தினர்களை ஈர்க்கும் முத்துச் சந்தை 2

cri

சீனாவில் முத்து அலங்காரப் பொருட்கள் விற்பனை செய்யும் மிகப் பெரிய சந்தையான ஹோங் சியெள சந்தைக்கு வருவோரில் வெளிநாட்டுப் பயணிகள் மிகவும் அதிகம்.

முத்து அலங்காரப் பொருட்களைத் தவிர, எண்ணியல் உற்பத்திப் பொருட்கள், பட்டுத்துணிகள், பெட்டிகள் உள்ளிட்ட வணிகப் பொருட்களும் இச்சந்தையில் வெளிநாட்டுப் பயணிகளால் வரவேற்கப்படுகின்றன. அமெரிக்காவின் பயணி ரூத்தி அம்மையார், இச்சந்தைக்கு வருவது, இதுவே முதல்முறையாகும். அவர் கூறியதாவது:
இங்கே வணிகப்பொருட்கள் நிறையுவுள்ளன. விலை மிகவும் குறைவு. நான் வாங்கிய பொருட்கள் குறித்து மனநிறைவு அடைந்தேன். எனக்கு பெய்ஜிங்கை மிகவும் பிடிக்கிறது என்றார் அவர்.
ஹோங் சியெள சந்தையில், ஐரோப்பிய மக்களுக்குப் பொருந்திய சட்டைகளும் காலாடைகளும் மிகவும் அதிகம். சில வெளிநாட்டுப் பயணிகள் விலை பற்றி பேரம் பேச விரும்புகின்றனர். பெய்ஜிங்கில் 5 ஆண்டுகாலம் வாழ்ந்த கெள லிங், இஸ்ரேலியர் ஆவார். பெய்ஜிங்கில் கற்றுக்கொண்டார். அவர் கூறியதாவது:

நண்பர்களுடன் சேர்ந்து முதல் முறை வந்தேன். என்னுடைய இஸ்ரேலிய நண்பர்கள் சீனத் தனிச்சிறப்பியல்புடைய பொருட்களை வாங்கினார்கள். சீனாவுக்கு வருவதற்கு முன்பு, அவர்கள் இணையதளத்திலிருந்து இச்சந்தையை பற்றி அறிந்துகொண்டுள்ளனர் என்றார் அவர்.
வெளிநாட்டுப் பயணிகளுக்கு தரமான சேவை வழங்க, விற்பனையாளர்கள் ஆங்கில மொழியைத் தேர்ந்தெடுத்து தொடர்பு கொண்டனர். விற்பனையாளர் லோ, ஹோங் சியெள சந்தையில் 5 ஆண்டுகளாக வேலை செய்கின்றார். சரளமாக ஆங்கில மொழி பேசுவதால், அவருடைய கடையில் வெளிநாட்டு விருந்தினர்கள் அடிக்கடி நிறைந்து காணப்படுகின்றனர். அவர் கூறியதாவது:
இச்சந்தையில் வேலை செய்வதுடன் நான் ஆங்கில மொழியைக் கற்றுக்கொண்டேன். சில நேரத்தில் வெளிநாட்டுப் பயணிகள் அவருடைய

நாடுகளின் பழக்கவழக்கங்களை பற்றி என்னிடம் கூறுகின்றனர் என்றார் அவர்.
அவரை போன்று, ஹோங் சியெள சந்தையில் பெரும்பாலான வணிகர்கள் ஆங்கில மொழி மூலம் பயணிகளுடன் பேசலாம். சிலர், ரஷியா, ஜப்பான், கொரியா, ஸ்பெயின் ஆகிய நாடுகளின் பேசலாம். பெய்ஜிங் ஒலிம்பிக்கிற்கு, ஹோங் சியெள சந்தை தயாராகியுள்ளது என்று, இச்சந்தை அலுவலகத்தின் இயக்குநர் வாங் லீ லுங் தெரிவித்தார்.
உண்மையில், 2006ம் ஆண்டின் இறுதி முதல் இதுவரை, பல்வேறு துறைகளில் ஏற்பாட்டுப் பணி செய்துள்ளோம். சந்தையின் அடிப்படை வசதிகளை முழுமையாக சீர்திருத்தியுள்ளோம். வெளித் தோற்றம், உள்ளே

வசதிகள், சீன மற்றும் ஆங்கில மொழி விளக்க அட்டைகள், தடையற்ற வசதி, வங்கி அட்டை சேவை முதலியவை இதில் இடம்பெறுகின்றன. அத்துடன், சந்தையிலான வணிகர்களுக்கு பயிற்சி அளித்து, அடிப்படை ஒலிம்பிக் அறிவைப் பிரச்சாரம் செய்துள்ளோம் என்றார் அவர்.
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெறும் போது, ஹோங் சியெள சந்தையில், முத்து பண்பாட்டு விழா நடைபெறுகிறது. இதில், முத்து பொருட்காட்சி முக்கிய பகுதியாகும்.
ஒலிம்பிக்கை ஒரு வாய்ப்பாக கொண்டு, உலக மக்களுக்கு, பெய்ஜிங்கையும், ஹோங்சியேள சந்தையையும் சீனாவின் முத்துகளையும் அறிமுகப்படுத்த பாடுபட வேண்டும் என்றும் வாங் லீ லுங் தெரிவித்தார்.