• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-22 10:29:36    
அறிவியல் தொழில் நுட்ப ஒலிம்பிக்

cri
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்த விண்ணப்பம் செய்வது முதல், இப்போட்டியின் துவக்கம் வரையான 7 ஆண்டுகாலத்தில், சீன அறிவியல் அமைச்சகம் பெய்ஜிங் மாநகரின் தொடர்புடைய வாரியங்களுடன் 317 கோடி யுவான் ஒதுக்கீட்டில், ஆயிரத்துக்கு மேலான திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. இதில், அதிகமான அறிவியல் தொழில் நுட்பச் சாதனைகள் ஏற்பட்டுள்ளன.

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவிலான தொழில் நுட்ப முறைமை, கடந்த சில ஒலிம்பிக் போட்டிகளை விட, மிக நுட்பமாக அமைந்தது. அதில், ஏராளமான, மிக நவீனமான, புதிய தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டன. பறவைக் கூடு மற்றும் நீர் கன சதுரத்தில், உலகில் பல தலைசிறந்த அறிவியல் தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டன. பெய்ஜிங் ஒலிம்பிக் திட்டப்பணிக்கான கட்டுமானத்தில், தற்சார்ப்புப் புத்தாக்கத் துறையில் பல பத்து அறிவியல் தொழில் நுட்பச் சாதனைகள் பெறப்பட்டன.

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, சீனா மற்றும் உலகிற்கு அற்புதமான, அரிய மரபுச் செல்வத்தை வழங்குகிறது என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வெளியிட்ட மதிப்பீட்டறிக்கை கூறியது.