• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-22 15:56:47    
சீனாவின் ஹெச்சே இனம்

cri

சீனாவின் ஹெச்சே இன மக்கள், சீன வடக்கிழக்கு பகுதியின் Heilongjiang மாநிலத்தின் nahe மாவட்டத்திலும், உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசத்திலும் வாழ்கின்றனர். அவர்கள், தங்களை ஹெச்சே என அழைக்கின்றனர். ஹெச்சே என்றால், மலை மற்றும் காடுகளில் வாழ்கின்றவர்கள் என்று பொருள்படுகிறது. இதன் மக்கள் தொகை, 4200 ஆகும்.

ஹெச்சே மொழி, Altic மொழி குடும்பத்தின் tonggusi கிளையைச் சேர்ந்தது. இவ்வினத்தின் ஆயர்கள் பெரும்பாலானோர், மங்கோலிய மொழியைப் பேசுகின்றனர். ஆனால், விவசாயிகள் சீன மொழி பேசுகின்றனர். புராணக் கதைகள், பாடல், புதிர்கள் ஆகியவை, வாய் மொழி தகவல்கள் மூலம் ஹெச்சே இனம் உருவாக்கிய இலக்கிய வகைகளாகும். அவர்கள், Birch மரத் தோல்களை கொண்டு பல்வகை கைவினை பொருட்கள் செதுக்குவதை விரும்புகின்றனர்.

ஹெச்சே இன மக்களில் பெரும்பாலானோர், ஆடுமாடுகள் மேய்க்கின்றனர். வேறு சிலர் வேளாண் துறையில் ஈடுபடுகின்றனர். முன்பு, மான்கள், தான் அவர்களின் ஒரே ஒரு போக்குவரத்து கருவிகளாக இருந்தன. மான்கள், காடுகளிலான படகு என்று அவர்களால் கூறப்படுகின்றன.

கால்நடை வளர்ப்பு பிரதேசத்தில் வாழ்கின்றவர்கள், பால், இறைச்சி, கோதுமை ஆகியவற்றைச் சாப்பிடுகின்றனர். பாலை, இவர்களின் இன்றியமையாத உணவாகும். பாலை தவிர, அவர்கள், தயிர், மோர் முதலியவற்றை உற்பத்தி செய்கின்றனர். ஆடுமாடுகளின் இறைச்சியை அவர்கள் முக்கியமாக சாப்பிடுகின்றனர். ஆண்டுக்கு ஒரு குடும்பம், 20க்கு மேலான ஆடுகளையும் இரண்டு மாடுகளையும் சமைத்து சாப்பிடுகின்றது.

ஹெச்சே இன மக்கள், saman மற்றும் லாமா மதங்களின் மீது நம்பிக்கை கொம்டுள்ளனர். பிற இனங்களோடு கொண்டாடுகின்ற வசந்த விழாவை தவிர, சந்திர நாள் காட்டியின்படி, 5ம் திங்களின் கடைசி 10 நாட்களில் mitiaolu என்ற விழாவை அவர்கள் கொண்டாடுகின்றனர். mitiaolu என்றால், நல்ல அறுவடை என்று பொருள். விழாவின் போது, ஹெச்சே இன மக்கள் அழகான ஆடைகளை அணிகின்றனர். ஆண்கள், குதிரை பிடரி மயிர் மற்றும் வால் முடியை கத்தரிக்கின்றனர்.