• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-22 09:29:52    
Cao Li Qing அம்மையார்

cri
Cao Li Qing அம்மையார், 2001ஆம் ஆண்டு முதல் Chen Zhou நகரின் Lin Wu மாவட்டத்தின் Mai Shi வட்டத்தில் உள்ள Wu Xing கிராமத்தின் மகளிர் சம்மேளனத்தின் தலைவராக பணி புரிந்து வருகின்றார். கடந்த சில ஆண்டுகளாக, அவரது தலைமையில், உள்ளூர் கிராமவாசிகள் செல்வ செழிப்படையும் பாதையில் முன்னேறி வருகின்றனர்.
ஓராண்டுகால முயற்சியுடன், 1995ஆம் ஆண்டு Cao Li Qing அம்மையார் தமது முதலாவது இரும்பற்ற உலோக சுரங்க தொழில் நிறுவனத்தை வெற்றிகரமாக நிறுவினார். அந்த ஆண்டு இந்நிறுவனத்தின் உற்பத்தி மதிப்பு 18 இலட்சம் யுவானை எட்டியது. தொழில் நிறுவனம் மீதான நிர்வாகத்தை வலுப்படுத்தி, அதன் வளர்ச்சியை விரைவுபடுத்தும் பொருட்டு, 1995 முதல் 2002ஆம் ஆண்டு வரையான கால கட்டத்தில்,

வெளியூர்களிலிருந்து தொழில் நுட்ப வல்லுனர்கள் நிர்வாகப் பணியாளர்கள் என 120 பேரை வேலைக்கு அமர்த்தி, தொழில் நுட்ப அறிவு மிக்க பணியாளர்கள் அணியை Cao Li Qing அம்மையார் முழுமூச்சுடன் உருவாக்கினார். இக்காலத்தில், அவர் மற்றவர்களுடன் சேர்ந்து Hong Yuan மற்றும் Liu Ba இரும்பற்ற உலோக சுரங்க நிறுவனங்களை கூட்டாக நிறுவினார். இந்நிறுவனங்களின் அசையா சொத்து மதிப்பு, 3 கோடியே 50 இலட்சம் யுவானை எட்டியது. ஆண்டு உற்பத்தி மதிப்பு, 2 கோடியே 60 இலட்சம் யுவானாகியது.
பொது மக்கள் செல்வ செழிப்படைய மேலும் செவ்வனே தலைமை தாங்கி, புதுவகை சோஷலிச கிராம உருவாக்கத்தில் Wu Xing கிராமத்தை மாதிரி கிராமமாக உருவாக்கும் பொருட்டு, 2001ஆம் ஆண்டு, Cao Li Qing அம்மையார் கிராமத்தின் மகளிர் சம்மேளனத் தலைவர் என்ற கடமையாற்றினார். இக்கிராமத்தின் இயற்கையான நிலைமைகளை சார்ந்து, Wu Xing கிராமம், San Shi Liu Wan சுரங்க பகுதிக்கு அருகில் உள்ள மேம்பாட்டை முழுமையாகப் பயன்படுத்தி, கிராமத்தின் தொழிலாளர்களை, தொழிற்துறையிலும் சுரங்கத்துறையிலும் ஈடுபடுவதற்கு அவர் ஊக்கமளித்தார். அத்துறைகள் வளர்ச்சியடைவதன் மூலம் கிராமவாசிகள் செல்வ செழிப்படையும் தலையான பணியாக அவர் கொண்டார். Wu Xing கிராமத்தையும், San Shi Liu Wan சுரங்கப் பகுதியையும் இணைக்கும் 6 கிலோமீட்டர் நீளமுடைய சாலை, 2004ஆம் ஆண்டின் மார்ச் திங்கள் போக்குவரத்துக்குத் திறந்து விட்டது. நாள்தோறும் சுமார் 300 வாகனங்கள்

இப்பாதையில் செல்கின்றன. San Shi Liu Wan சுரங்கப் பகுதியின் சரக்கு புழக்கத்துக்கும், கிராமத்தின் தொழிலாளர்கள், சுரங்கப் பகுதிக்குச் சென்று வேலை செய்வதற்கும் இப்பாதை சிறந்த அடிப்படையிட்டுள்ளது.
Cao Li Qing அம்மையார், Wu Xing கிராமத்தை ஓரளவு வசதி படைத்த கிராமமாக உருவாக்க பாடுபட்டு வருகின்றார். 4 இலட்சம் யுவான் முதலீடு செய்து, உயர் தரமான Wu Xing துவக்கப் பள்ளியும், கிராம கட்டிட வளாகமும் கட்டிமுடிக்கப்பட்டன. முதல்தரமான கல்வி வசதிகளும், விசாலமான வகுப்பறைகளும் சிறந்த கல்விச் சூழலை உருவாக்கியுள்ளனர். 7 இலட்சத்து 60 ஆயிரம் யுவான் முதலீடு செய்யப்பட்டு, 1.5 கிலோமீட்டர் நீளமுடைய காரையாலான கிராம பாதை சீரமைக்கப்பட்டது. 7 இலட்சத்து 80 ஆயிரம் யுவான் முதலீட்டுடன், Wu Xing கிராமத்தின் பொழுதுபோக்கு சதுக்கம் கட்டிமுடிக்கப்பட்டது.

பொருட்களுக்கான சிறப்பு சந்தையின் தேவை பற்றி பலமுறை ஆய்வு மேற்கொண்ட பின், மலைப் பிரதேசத்தில், ஆடுகளை வளர்த்து, சேப்பங்கிழங்கை பயிரிடுவது, எதிர்கால சந்தையில் ஒளிவீசும் வாய்ப்பைத் தரக்கூடும் என்பதை Cao Li Qing அம்மையார் கண்டுபிடித்தார். அதற்கு பின், அவர் உதவி வழங்கி, கிராமத்தில் உள்ள ஒரு பகுதி மகளிர், கால்நடை வளர்ப்பு மற்றும் பயிர் பயிரிடுதலில் ஈடுபட ஏற்பாடு செய்தார்.
தமது ஊர் படிப்படியாக வளர்ந்து, கிராமவாசிகளின் வருமானம் அதிகரித்துள்ளதைக் கண்டு, Cao Li Qing அம்மையார் மனநிறைவு அடைந்துள்ளார். Cao Li Qing அம்மையாரின் முயற்சியுடன், தற்போது இக்கிராமத்தின் 90 விழுக்காட்டுக்கு மேலான கிராமவாசிகள், சுரங்கத்தொழிலில் முதலீடு செய்துள்ளனர் அல்லது அது தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 2007ஆம் ஆண்டு Cao Li Qing அம்மையார், மாவட்டத்தின் மகளிர் சம்மேளனத்தால், மகளிர் ஆதரவுவீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.