• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-22 09:32:38    
பெய்ஜிங் ஒலிம்பிக்கிற்கான பிரேசில் தூதரின் வியப்பு 1

cri

ஒலிம்பிக்கை நடத்துவதற்கான சீனாவின் ஆற்றல் குறித்து பிரேசில் தூதர் வியப்பு தெரிவித்தை பற்றி தெரிந்து கொள்வோம்.

2004ம் ஆண்டில், சீனாவிலுள்ள பிரேசிலின் தூதராக பதவி ஏற்றார் திரு காஸ்ட்ரோ நெவேஸ், பெய்ஜிங்கில் கடந்த சுமார் 4 ஆண்டுகாலமாக வாழ்ந்து வரும் அவர். நீண்டகால வரலாறு மற்றும் மாபெரும் மாற்றங்களைக் கொண்ட பெய்ஜிங்கால் ஈர்க்கப்பட்டுள்ளார். பேட்டியில், தமது கண்களின் மூன், இடைவிடாமல் மாற்றமடைந்து வரும் பெய்ஜிங் பற்றி, அவர் கூறியதாவது:

பெய்ஜிங்கின் மாற்றங்கள், என் மனதில் ஆழப்பதிந்துள்ளன. 2004ம் ஆண்டில் இருந்ததை விட, இன்றைய பெய்ஜிங் முற்றிலும் வேறுபட்டது. பெய்ஜிங் மென்மேலும் அழகானது. இங்கு வாழ்வது மென்மேலும் வசதியாக இருக்கிறது என்றார் அவர்.

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடத்துவது என்பது, எந்த நாட்டையும் பொறுத்தவரை பெரிய அறைகூவலாகும். ஏற்று நடத்தும் நாடு, குறுகியக்காலத்தில் அனைத்து அடிப்படை வசதிகளுக்கும் குறிப்பாக அரங்குகளின் கட்டுமானத்துக்கான ஏற்பாட்டுப்பணிகளை நிறைவேற்ற வேண்டும். வளரும் நாடான சீனா, ஒலிம்பிக்கிற்கான ஆயத்தப்பணிகளில் வியப்பான வேகத்தையும் திறனையும் வெளிப்படுத்தியுள்ளது. ஏன், சில வளர்ந்த நாடுகளை விட இது குறிப்பிடத்தக்க திறன் கொண்டது என்று தூதர் நெவேஸ் கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது:

சீனாவின் ஒருங்கிணைப்பாளர்களைப் பொறுத்தவரை, பெய்ஜிங் ஒலிம்பிக்கிற்கான ஆயத்தப்பணி, மாபெரும் சோதனையாகும். ஆனால், கடந்த சில ஆண்டுகளில் சீனாவின் ஆயத்தப்பணி ஒழுங்காக நடைமுறைப்படுத்தப்பட்டது. ஒலிம்பிக் கிராமம், பறவைக் கூடு என்னும் தேசிய விளையாட்டு அரங்கம், நீர் கன சதுரம் என்னும் நீச்சல் மையம், விமான நிலையத்தின் மூன்றாவது முனையம், விமான நிலையத்துக்குச் செல்லும் சிறப்பு உயர்வேக இருப்புப்பாதை ஆகியவற்றின் கட்டுமானப்பணி, இவற்றில் சிறப்பாக குறிப்பிடத்தக்கவை. தவிர, சீன மக்கள், குறிப்பாக பெய்ஜிங் மாநகரவாசிகள், இதற்கு சீராக ஒத்துழைத்துள்ளனர் என்றார் அவர்.

பல்வேறு நாடுகளின் விருந்தினர்களை வரவேற்கும் பொருட்டு, பல நகரங்களில் வெளிநாட்டு மொழிப் பயிற்சி வகுப்புகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதற்கு, பொது மக்கள் மிகப் பெரும் ஆர்வத்தையும் பேரூற்சாக்கத்தையும் காட்டியுள்ளனர். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி துவங்கிய பின், இந்த உற்சாகமான சீனர்கள், தரமான வழிகாட்டிகளாக மாறுவார்கள் என்று தூதர் நெவேஸ் நம்பிக்கை தெரிவித்தார்.

2016ம் ஆண்டின் கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்தும் உரிமைப் பெற, பிரேசிலின் ரியோ டி ஜெனீரொ நகரம் ஆக்கப்பூர்வமாக விண்ணப்பித்து வருகிறது. பெய்ஜிங் ஒலிம்பிக்கிற்கான ஆயத்தப்பணி, ரியோ டி ஜெனீரொவின் முன்மாதியாக இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.