• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-22 18:01:33    
ஒழுங்கான முறையிலான பெய்சிங் ஒலிம்பிக் சுற்றுலா

cri

ஆகஸ்ட் 21ம் நாள் பெய்சிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பெய்ஜிங் சுற்றுலா ஆணையத்தின் துணைத் தலைவர் சியூங் யு மே அம்மையார் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போதைய பெய்ஜிங் சுற்றுலா நிலைமை பற்றி விவரித்தார். திட்டத்தின் படி இந்த துறை பல்வகை உபசரிப்பு சேவைகளை இனிதாக நிறைவேற்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். தங்கும் வசதியுள்ள நட்சத்திர உணவகங்கள் ஆகஸ்ட் 7ம் நாள் முதல் உபசரிப்பில் உச்ச நிலையை அடைந்துள்ளன. 8ம் நாள் முதல் 20ம் நாள் வரையான காலத்தில் பெய்ஜிங்கிலுள்ள 117 அரசு சார் உணவகங்கள் நாள்தோறும் 32 ஆயிரம் விருந்தினர்களை உபசரித்துள்ளன. இதுவரை உணவகங்களை பற்றிய புகார் எதுவும் கிடைக்கவில்லை. நகரின் சுற்றுலா தலங்களில் உபசரிப்பு பணி பற்றி குறிப்பிடுகையில் சியூங் யு மே கூறியதாவது.

ஒலிம்பிக் விளையாட்டுப் போடியின் போது 164 முக்கிய காட்சி தலங்கள் 48 இலட்சம் பயணிகளை உபசரித்தன. அரண்மனை அருங்காட்சியகம், கோடைகால பூங்கா, சொர்க்க ஆலயம், பெருஞ்சுவர் உள்ளிட்ட 21 முக்கிய சுற்றுலா காட்சிதலங்கள் 20க்கும் அதிகமான நாடுகளின் ஆயிரம் மதிப்புக்குரிய விருந்தினர்களை உபசரித்தன என்றார் அவர். விளையாட்டு வீரர்களை உபசரிப்பதில் இதுவரை 204 நாடுகள் மற்றும் பிரதேசங்களை சேர்ந்த 14 ஆயிரத்து 300 விளையாட்டு வீரர்களும் அதிகாரிகளும் ஒலிம்பிக் கிராமத்தில் உபசரிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பெய்ஜிங்கில் சுற்றுலா செய்வதற்கு வசதி வழங்கும் வகையில் பெய்ஜிங் சுற்றுலா ஆணையம் அனுபவம் கொண்ட சுற்றுலா நிறுவனங்களை தேர்வு செய்து ஒலிம்பிக் கிராமத்துக்கும் செய்தி ஊடக கிராமத்துக்கும் அனுப்பியது. ஒரு நாள் பயணம், பல நாள் பயணம் போன்ற 32 சுற்றுலா நெறிகள் நிறுவப்பட்டுள்ளன. இவையனைத்திற்கும் விளையாட்டு வீரர்களும் பயிற்சியாளர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். வெவ்வேறான மக்களின் தேவையை மனநிறைவு செய்யும் வகையில் ஒலிம்பிக் கிராமம் செய்தி ஊடகக் கிராம்ம் ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்கள் விளையாட்டு வீரர்களுக்கு உடை மற்றும் உணவு சேவைகளை கவனத்துடன் வழங்கியது தவிர வாழ்க்கையின் உணர்வு பூர்வமாக தொடர்புடைய நேரங்களிலும் அவர்களுக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளனர். இது பற்றி சியூங் யு மே அம்மையார் கூறியதாவது.

பிறந்த நாளை கொண்டாடும் வீரர்கள் தமது வீட்டில் இருப்பதை போல உணரும் வகையில் சேவை பிரிவு அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து அட்டையையும் பூக்கொத்தையும் அன்பளிப்பாக வழங்கியது. ஆகஸ்ட் 19ம் நாள் மட்டுமே 60 விளையாட்டு வீரர்கள் பிறந்த நாள் வாழ்த்து அடையையும் பூக்கொத்தையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. ஒலிம்பிக் கிராமத்தின் அருமையான சேவை பல்வேறு விளையாட்டு வீரர்கள், அதிகாரிகள் மற்றும் செய்தியாளர்களின் உயர்வான பாராட்டை பெற்றுள்ளது. இதற்கிடையில் 51 பாராட்டுக் கடிதங்களும் 466 பாராட்டுக் குறிப்பும் பெறப்பட்டன என்றார் அவர். இப்போது பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நிறைவடையும் நேரம் நெருங்குகிறது. ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி துவங்கவுள்ளது. அப்போட்டியில் கலந்து கொள்வோர் ஊனமுற்றோர்களானதால் அவர்களுக்கென தங்கும் வசதியுள்ள உணவகங்கள், போக்குவரத்து, பூங்காக்கள் முதலிய இடங்களில் தடையில்லாமல் செல்வதற்கான வசதிகள் போடப்பட்டுள்ளன. இது பற்றி சியூங் யு மே அம்மையார் கூறியதாவது.

வாழ்க்கையுடன் தொடர்பான வசதிகளை அமைப்பதில் தங்கும் வசதியுள்ள உணவகங்கள் ஈடுபாடு காட்டின. அனைத்திலும் தடையில்லாமல் செல்லக் கூடிய வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாகனங்கள் நிறுத்துமிடம் ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளது. மின்படி நடை பாதைகள், சிறப்பு கழிவறைகள் மற்றும் படுக்கையறைகள் போன்ற ஊனமுற்றோருக்கான வசதிகள் போடப்பட்டுள்ளன என்றார் அவர். செப்டம்பர் திங்கள் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெறும் போது சீனா சிறந்த சேவையுடன் பல்வேறு விளையாட்டு வீரர்களை வரவேற்கும். பெய்ஜிங்கில் ஒலிம்பிக் கனவை நனவாக்க அவர்களுக்கு உதவ விரும்புவதாக சியூங் யு மே அம்மையார் தெரிவித்தார்.