• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-23 18:19:30    
மாலை 6 மணி வரையான ஒலிம்பிக் பதக்கங்கள்

cri

இன்று பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் 15 வது நாளாகும். மாலை 6 மணி வரை, மலை மிதிவண்டி, ஆடவர் கால்பந்து, Handball எனும் கைப்பந்து, ஓடும் நீரில் படகு முதலிய போட்டிகளில் 11 தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

காலை முடிவடைந்த மகளிர் மலை மிதிவண்டி போட்டியில், ஜெர்மனி வீராங்கனை Sabine Spits தங்கப் பதக்கம் பெற்றார்.

அர்ஜென்டீன அணி மற்றும் நைஜீரிய அணி

ஆடவர் கால்பந்து போட்டியில், அர்ஜென்டீன அணி தங்கப் பதக்கம் பெற்றது.
மாலை முடிவைடந்த ஓடும் நீரில் 500 மீட்டர் மகளிர் ஒற்றையர் சிறு வள்ள ஓட்டத்தில், உக்ரைன் வீராங்கனை Inna OSYPENKO-RADOMSKA தங்கப் பதக்கம் பெற்றார்.

ஓடும் நீரில் 500 மீட்டர் ஆடவர் இரட்டையர் சிறு வள்ள ஓட்டத்தில் ஸ்பெயின் வீரர்கள் Saul CRAVIOTTO மற்றும் Carlos PEREZ தங்கப் பதக்கம் பெற்றனர்.

சீன வீரர்கள் Meng Guanliang, Yang Wenjun ஆகியோர்

ஓடும் நீரில் 500 மீட்டர் ஆடவர் இரட்டையர் வள்ள ஓட்டத்தில், சீன வீரர்கள் Meng Guanliang, Yang Wenjun ஆகியோர் தங்கப் பதக்கம் பெற்றனர்.

ஓடும் நீரில் 500 மீட்டர் மகளிர் இரட்டையர் சிறு வள்ள ஓட்டத்தில் ஹங்கேரியின் வீராங்கனைகள் KOVACS Katalin, JANIC Natasa ஆகியோர் தங்கப் பதக்கம் பெற்றனர்.

ஓடும் நீரில் 500 மீட்டர் ஆடவர் ஒற்றையர் தோல் படகு போட்டி, ஆஸ்திரேலியாவின் வீரர் Ken WALLACE தங்கப் பதக்கம் பெற்றார்.

இன்று மாலை முடிவடைந்த ஓடும் நீரில் 500 மீட்டர் ஆடவர் ஒற்றையர் வள்ள ஒட்டத்தில், ரஷிய வீரர் Maxim Opalev தங்கப் பதக்கம் பெற்றார்.

ரஷிய அணி

பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் மகளிர் குழு ஒத்தியக்க நீச்சல் போட்டியில், ரஷிய அணி தங்கப் பதக்கம் பெற்றது.