• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-23 19:06:23    
பெய்சிங்கில் சுற்றுச்சூழல் மேம்பாட்டு நடவடிக்கை

cri

பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு பின், பெய்ஜிங்கில் நீண்டகாலப் பயன் தரும் சுற்றுச்சூழல் மேம்பாட்டு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். பெய்சிங் மாநகரத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தின் துணைத் தலைவரும் செய்தித் தொடர்பாளருமான தூ சௌசோங் இன்று பெய்சிங்கில் இதைத் தெரிவித்தார்.

பெய்சிங் சுற்றுச்சூழல் தரத்துக்கான மேம்பாட்டின் முன்னேற்றப் போக்கை விரைவுப்படுத்தும் வகையில், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது மேற்கொள்ளப்பட்ட தற்காலிகக் கட்டுப்பாட்டு நடவடிக்கை இனி குறிப்பிட்ட வடிவத்தில் உறுதிப்படுத்தப்படும். பசுங்கூட வாயுக்கள் வெளியேற்ற வரையறையை எட்ட முடியாத கடும் மாசுபாட்டு தொழில் நிறுவனங்கள் மீது, நிறுத்தம் அல்லது கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தூ சௌசோங் குறிப்பிட்டார்.

தவிர, பெய்சிங் மாநகர சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போதைய அனுபவத்தைக் கற்றுப் பயன்படுத்தி, நிரந்தர சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிர்வாகப் பணியில் பங்கெடுக்க நகரச் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தன்னார்வத் தொண்டர்களை ஏற்பாடு செய்யும்.