சீனா, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்துவது, பல்வேறு நாடுகளின் விளையாட்டு வீரர்கள் தங்களது திறனை வெளிப்படுத்த அரங்கை வழங்கியதோடு, உலகிற்கு தனது புதிய தோற்றத்தையும் வெளிப்படுத்தியுள்ளது. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு சீனா மேற்கொண்ட முயற்சி, முக்கியத்துவம் வாய்ந்தது. இது குறித்து, சீனா மனநிறைவு அடைந்துள்ளது என்று, சீனத் தலைமையமைச்சர் வென்சியாபாவ் தெரிவித்தார்.
இன்று பெய்ஜிங்கில் டொமினிக்கன் குடியரசின் தலைமையமைச்சரைச் சந்தித்துரையாடிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெற்ற போது, சர்வதேசச் சமூகத்தின் பல்வேறு துறைகள் சீனாவுக்கு, ஆதரவு வழங்கியுள்ளன. இதற்கு சீனா நன்றி தெரிவித்தது. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, மாபெரும் சர்வதேச பெரிய குடும்பத்தின் கூட்டமாகும். பல்வேறு நாடுகள், சமத்துவ முறையில் கூட்டாக வாழ வேண்டும் என்றும் வென்சியாபாவ் வலியுறுத்தினார்.
|