29வது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி இன்று பெய்ஜிங்கில் நிறைவடைந்தது. பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி ஒலிம்பிக் வரலாற்றில் உண்மையில் ஒப்பில்லாததாக அமைந்திருந்தது என்று நிறைவு விழாவில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் Jacques Rogge கூறினார்.
அதிகாரப்பூர்வ தரவுகளின் படி, போட்டியில் கலந்து கொண்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களின் எண்ணிக்கை, முறியடிக்கப்பட்ட உலக சாதனைகளின் எண்ணிக்கை, ஒலி மற்றும் ஒளிபரப்புகளின் அளவு, முழு உலகில் இது பற்றிய நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்கும் மக்களின் எண்ணிக்கை முதலியவற்றில், நடப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, பல புதிய பதிவுகளை உருவாக்கியுள்ளது.
சீன அரசுத் தலைவர் ஹு சிந்தாவ், 20க்கு அதிகமான நாடுகளின் தலைவர்கள் அல்லது அரசக் குடும்பத்தினர்கள் ஆகிய பிரமுகர்கள் இன்றிரவு நடைபெற்ற நிறைவு விழாவில் கலந்து கொண்டனர். நடப்புப் போட்டியில் 87 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பதக்கங்கள் பெற்றனர். ஒலிம்பிக் விளையாட்டுக்கள் தொடர்ந்து மேலும் பரந்த உறுப்பு நாடுகளில் சம நிலையில் பரவலாகி வருகின்றது என்பதை இது காட்டுகின்றது. தங்கப் பதக்க வரிசையில் சீனா, அமெரிக்கா, ரஷியா ஆகியவை முதல் 3 இடங்களில் உள்ளன. மொத்த பதக்க எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கின்றது. நிறைவு விழாவில், அடுத்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்தும் லண்டன், பெய்ஜிங்கிடமிலிருந்து ஒலிம்பிக் கொடியை ஏற்றுக்கொண்டது. இன்றைய செய்தி அறிக்கைக்குப் பின், நிறைவு விழா பற்றிய சிறப்பு நிகழ்ச்சி வழங்குகின்றோம். கேட்கத் தவறாதீர்கள்.
|