ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழாவில் கலந்து கொள்ளும் சர்வதேச மதிப்புக்குரிய விருந்தினர்களுக்கு சீன அரசுத் தலைவர் ஹுசிந்தாவ் இன்று நண்பகல் பெய்சிங்கில் விருந்து அளித்தார்.
இவ்விருந்தில் ஹுசிந்தாவ் உரை நிகழ்த்தினார். அவர் கூறியதாவது:
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, அமைதியான ஒற்றுமை மற்றும் நட்பார்ந்த ஒலிம்பிக் எழுச்சியை வெளிக்கொணர்ந்து, பல்வேறு நாட்டு மக்களும் கண்டுகளித்து கலந்து கொண்ட மாபெரும் சர்வதேச விளையாட்டு மற்றும் பண்பாட்டுப் பரிமாற்ற மாநாடாக மாறியுள்ளது. பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, சீன விளையாட்டு லட்சியத்தின் வளர்ச்சியை மேலும் பெரிதும் முன்னேற்றி, சீனா மற்றும் ஒலிம்பிக் எனும் பெரிய குடும்பத்தின் ஒத்துழைப்பையும் பரிமாற்றத்தையும் விரிவான முறையில் தூண்டி, சீன மக்களுக்கும் இதர நாடுகளின் மக்களுக்கும் இடையிலான புரிந்துணர்வையும் நட்புறவையும் ஆழமாக்கியுள்ளது என்றார் அவர்.
சில நாட்களுக்கு பின், பெய்சிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெறவுள்ளது. இரண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளும் மிகச்சிறந்தவையாக அமைய வேண்டும் என்ற கோரிக்கைக்கு இணங்க, தனிச்சிறப்பான உயர் நிலையான ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்த சீனா பாடுபட்டு, சர்வதேச ஒலிம்பிக் விளையாட்டின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பங்காற்றும் என்று ஹுசிந்தாவ் தெரிவித்தார்.
|