இன்று பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் கடைசி நாளாகும். மொத்தம் 12 தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் ஆடவர் மாரத்தான் நீண்டதூர ஓட்டப்போட்டியில், கென்ய வீரர் Samuel Kamau Wansiru தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.
மகளிர் தாளத்திற்கேற்ற குழு சீருடற்பயிற்சி போட்டியில், ரஷிய அணி தங்கப் பதக்கத்தைப் பெற்றது.
ஆடவர் 48 கிலோ எடைக்கு குறைவானோர் பிரிவு குத்துச்சண்டை போட்டியில், சீன வீரர் Zou Shi ming தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் ஆடவர் வாலிபால் போட்டியில், அமெரிக்க அணி தங்கப் பதக்கத்தைப் பெற்றது.
54 கிலோ எடைப்பிரிவு ஆடவர் குத்துச்சண்டை போட்டியில், மங்கோலிய வீரர் Badar-Uugan Enkhbat தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.
60 கிலோ எடைப்பிரிவு ஆடவர் குத்துச்சண்டை போட்டியில், ரஷிய வீரர் அலெக்ஸி Tishchenko தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.
69 கிலோ எடைப்பிரிவு ஆடவர் குத்துச்சண்டை போட்டியில், கசகஸ்தான் வீரர் Bakhyt Sarsekbayev தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.
81 கிலோ எடைப்பிரிவு ஆடவர் குத்துச்சண்டை போட்டியில், சீன வீரர் Zhang Xiaoping தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் ஆடவர் கூடைப்பந்து போட்டியில், அமெரிக்க அணி தங்கப் பதக்கத்தைப் பெற்றது.
91 கிலோவுக்கு மேற்பட்ட எடைப்பிரிவு ஆடவர் குத்துச்சண்டை போட்டியில் இத்தாலி வீரர் Roberto Cammarelle தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் ஆடவர் நீரில் போலோ போட்டியில், ஹங்கேரி அணி தங்கப் பதக்கத்தைப் பெற்றது.
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் Handball எனும் கைப்பந்து போட்டி ஆடவர் பிரிவில், பிரான்ஸ் அணி தங்கப் பதக்கத்தைப் பெற்றது. பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் இறுதி தங்கப் பதக்கம் இதுவாகும்.
|