• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-25 11:13:28    
வெற்றிகரமாக நிறைவடைந்த பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு

cri
29வது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழா, நேற்றிரவு பெய்ஜிங்கிலுள்ள சீனத் தேசிய விளையாட்டரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், விருந்தினர்கள் ஆகியோர், ஒற்றுமையான, இன்பமான, இணக்கமான சூழ் நிலையில், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வெற்றி பெற்றதை கூட்டாகக் கொண்டாடினர்.

சீன அரசுத் தலைவர் ஹூ சிந்தாவ், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் Jacques Rogge, ஆயுட்கால கௌரவ தலைவர் Antonio Samaranch, உலக பல்வேறு பிரதேசங்களின் தலைவர்கள் மற்றும் விருந்தினர்கள் ஆகியோர், நிறைவு விழாவில் கலந்து கொண்டனர்.

ஒலிம்பிக் தீ அணைக்கப்பட்டாலும், சீன மக்கள் உலகைத் தழுவிக் கொள்ளும் உற்சாகத் தீ என்றுமே எரிந்து கொண்டிருக்கும். ஒலிம்பிக் எழுச்சி இடைவிடாமல் வளர இதயப்பூர்வமாக வாழ்த்துவதாக பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்புக் குழுவின் தலைவர் லியோ ச்சி நிறைவு விழாவில் கூறினார்.

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, தலைசிறந்ததாக அமைந்தது. ஒளிமயமான 16 நாட்கள், எங்கள் மனதில் என்றுமே பதிந்திருக்கும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் Jacques Rogge நிறைவு விழாவில் கூறினார். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் சார்பில், அவர் சீன மக்களுக்கும், அனைத்து தன்னார்வத் தொண்டர்களுக்கும், பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்புக் குழுவிற்கும் நன்றி தெரிவித்தார்.

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, ஒலிம்பிக் விளையாட்டு வரலாற்றில் மிக வெற்றிகரமான மாபெரும் விளையாட்டு விழாவாக பொறிக்கப்பட்டுள்ளது.