• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-25 14:18:08    
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுக்கான பாராட்டு

cri
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நேற்றிரவு வெற்றிகரமாக நிறைவடைந்தது. பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இது சர்வதேச ஒலிம்பிக் விளையாட்டுக்கும் சீன வரலாற்றுக்கும் முக்கிய விளையாட்டு மற்றும் மானிட மைய மரபுச் செல்வங்களை வழங்கியுள்ளது என்று ஹாங்காங், மகௌ மற்றும் தைவான் செய்தியேடுகள் பொதுவாகக் கருத்துக்கள் வெளியிட்டுள்ளன.

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, சீன மக்கள் கனவை நனவாக்கும் நேரம் ஆகும். அதே வேளையில், சீனாவின் சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணியின் புதிய துவக்கமுமாகும் என்று ஹாங்காங்கின் wenhui செய்திதாள் கூறியது.

நவீன ஒலிம்பிக் விளையாட்டு வரலாற்றில் பெய்ஜிங் என்ற பெயர் பசுமரத்து ஆணி போல் என்றுமே பதிக்கப்படும் என்று மகௌ நாளேடு வெளியிட்ட கட்டுரையில் கூறியது.

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான நிறைவு விழாவின் நிகழ்ச்சிகளில் மகிழ்ச்சி மற்றும் பிரிவுக்கு விரும்பமில்லாத உணர்வுகள், நிறைந்து இருந்தன. இந்த விழா, மனிதகுலத்தின் மாபெரும் கூதுகல கூட்டமாகும் என்று தைவானின் சீன டைம்ஸ் வெளியிட்ட கட்டுரையில் தெரிவித்தது.